விஞ்ஞானி/தளையறு


கட்டுப் போட்டால் சுட்டப் புண் ஆறாது பெண்ணே
கட்டுப்பட்டால் பட்டத் துயர்
மாறாது

விட்டுவிட்டால் கட்டறுக்க முடியாது பெண்ணே
விட்டு தந்தால் பூட்டுடைக்க இயலாது

தளைகளைக் கலைந்து
திமிறி வா பெண்ணே
கூண்டினைத் திறந்து
வெளியே வா

தடைகளை உடைத்து
கடந்து வா பெண்ணே
எதிர்ப்பவரை மிதித்து
மீண்டு வா

நீ நினைந்தால்
எண்திசையும்
உன் தேசம்தான் பெண்ணே
சுதந்திரமாய்ச் சிறகடித்து
பறந்திடு விரைந்து.