
அழகானவை
ஆயின்
அனுபவிக்க வாய்க்காதவை
அச்சுறுத்துபவை
ஆயின்
ஆபத்தற்றவை
காயப்படுத்துபவை
ஆயின்
வலிக்காதவை
ஆறுதல் அளிப்பவை
ஆயின்
மாயமாக மறைந்து போகின்றவை
அர்த்தமுள்ளவை
ஆயின்
புரிந்து கொள்ள இயலாதவை
காட்சிகளாக விரிகின்றவை
ஆயின்
விழிகள் காணாதவை
நினைவுகளின் நினைவுகளாக வாழ்பவை
ஆயின்
எதிர்காலம் அற்றவை
ஆழ் மனதில் குடியிருப்பவை
ஆயின்
சாட்சிகள் அற்றவை
கனவுகள்..
துயிலாத உணர்வுகளின் நீட்சியாக
துயிலும் பொழுதுகளில் துரத்துபவை
ஆயின்
மீளாத் துயிலில் ஆழ்கையில்
அமைதியை ஆசிர்வதித்து
விடை பெறுபவை!

அருமை வாழ்த்துக்கள்