ரேவதி பாலு/எம் பி மூர்த்தி எழுதிய பிருந்தாவின் வாக்கிங்

பிருந்தா தூங்கி எழுந்து கண்ணாடி முன்னாடி போய் நிக்கறா.
பின்னாடியே அவள் கணவர்.
“நான் ரொம்ப குண்டா இருக்கேனா” அப்படின்னு தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே கேட்கிறாள் பிருந்தா.
” அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா. கல்யாணத்தின் போது பார்த்த மாதிரியே தான் இருக்கே “அப்படின்னு கணவர் சமாளிக்கிறார். “ஒருவேளை காட்டன் புடவை கட்டி இருக்கறதுனால உனக்கு அப்படி தோண்றதோ” என்று சமாதானமா சொல்கிறார்.
அவளுக்கு அவர் சொன்னது புடிச்சி இருக்கணும். ஏனென்றால் சிறிது நேரத்தில் வந்த காபி அருமையாக இருந்தது .
காஃபி குடுத்துட்டு சொல்றா.
” நான் நாளையில் இருந்து வாக்கிங் போகப் போறேன்” அப்படின்னு.
” தாராளமா போயேன்” என்று கணவர் சொல்கிறார்.
” போயேன் இல்ல வாரேன் .நீங்க தினம் போறீங்க இல்ல? காத்தால உங்களோடு தான் தினமும் வாக்கிங் வரப் போகிறேன்” என்கிறாள்.
” நான் சீக்கிரமே போவேனே.”
” பரவால்ல. நான் அலாரம் வைத்து எழுந்து சீக்கிரம் உங்களுடன் வரேன்” என்கிறாள்.
” இன்னிக்கு சாயந்திரம் கொஞ்சம் சீக்கிரம் வாங்க. நாம தி நகர் ரங்கநாதன் தெரு வரைக்கும் வாக்கிங் போகலாம்” என்கிறாள்.
” அதுதான் நாளைக்கு காலையில போக போறோமே” அப்படின்னு சொல்றார் கணவர்.
” இல்ல வாக்கிஙு போக புது செருப்பு வேணும் எனக்கு. அது வாங்க போகணும்” அப்படின்னு சொல்றா.
மறுநாள் அலாரம் வைத்து எழுந்து புது செருப்பை போட்டுக்கொண்டு பெருமையாக தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு வாக்கிங் செல்ல தயாரானாள் பிருந்தா. குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு செல்லலாம் என்று தீர்மானம் ஆகியது.
தெருமுனை வரை சாதாரணமாக இருவரும் நடந்து போனார்கள். அதற்கு மேல் பிருந்தாவால் நடக்க முடியவில்லை.
” என்ன நீங்க இவ்ளோ வேகமா நடக்குறீங்க? என்ன விட்டுட்டு போறீங்களே” அப்படின்னு சொல்றா.
“தினமும் இவ்வளவு தூரமா போறீங்க வாக்கிங்” அப்படின்னு கேட்கிறா.
” கொஞ்சம் என் கூட பேசிண்டு நடந்தால் தான் என்ன? இப்படி பேசாம வரீங்களே” என்கிறாள்.
“நடக்கிறச்சே பேசினா மூச்சு இரைக்கும்மா” அப்படின்னு சொல்றார்.
“இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?”
” அந்த முனை வரைக்கும் போகணும்”
” நான் இங்கேயே நிற்கிறேன் .நீங்க போயிட்டு வாங்க. அப்புறம் நம்ம ரெண்டு பேரும் வீட்டுக்கு போகலாம்” அப்படின்னு சொல்கிறாள்.
அவர் நண்பர் ராகவன் அவரை வழியில் சந்திக்க அவரிடம் பேசிக் கொண்டே திரும்புகிறார் கணவர்.
” எங்கிட்ட பேச முடியாது அவர்கிட்ட மட்டும் பேச முடியுமா” என்று கோபிக்கிறாள் பிருந்தா.
ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தால், பக்கத்து வீட்டு பாட்டி வாசல் தெளித்ததுனால இவங்க வீட்டு வாசலில் பேப்பர் நனைந்து கிடக்கிறது. பால் பாக்கெட் அனாதையாக கிடக்கிறது.
அடுத்த நாள் அலாரம் அடித்ததும் கணவர் பிருந்தாவை எழுப்புகிறார்.
” புது செருப்பு காலை கடித்து கால் எல்லாம் ஒரே கொப்பளம் நான் வரல நீங்க போயிட்டு வாங்க “என்று சொல்லிவிட்டு அத்தோடு நில்லாமல்
” நீங்க ஆம்பளையாச்சே! காத்தால சீக்கிரம் எழுந்து வாக்கிங் போயிட்டு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்து விரட்டி வேலை வாங்கி அலுவலகத்துக்கும் போயிடுவீங்க. தினமும் வாக்கிங் போய் உடம்பை ட் ரிம்மா வைப்பீங்க .எனக்கு எழுந்துக்கறதுக்கு முன்னாடியே வீட்ல வேலை காத்துட்டு இருக்கு .நான் இங்க பிளாட் லேயே வாக்கிங் போகிறேன்”
என்கிறாள்

இதற்கு மேல் பேச்சு கொடுத்தால் வம்பு என்று கணவர் தான் வாக்கிங் கிளம்பி விடுகிறார் மிக எளிமையா வீட்டுக்கு வீடு நடக்கும் எதார்த்தத்தை நகைச்சுவை மிளிர இந்த கதை படம் பிடித்து காட்டுகிறது

One Comment on “ரேவதி பாலு/எம் பி மூர்த்தி எழுதிய பிருந்தாவின் வாக்கிங்”

Comments are closed.