தங்கேஸ்/மனதை வைத்து மனதை படிக்கும் கலை

மனதை வைத்து
மனதைப்படிக்கும்
கலையை அறிந்த
உன் கண்களின் மமதையையும்
ஏமாற்றியதோ
என் காதல்?

அது உன் இதயத்தை தட்டி
அனுமதி கேட்டு நுழையவில்லை..

கண்களின் வழியே
காட்சியாய் நுழையவில்லை..

காற்றாக ஒலியாகவும்
உனக்குள் ஊடுருவவில்லை

எனில் …பின்
அது என்ன ரசவாதம் செய்து
உனக்குள் நுழைந்ததோ
அதுவும் எனக்குத் தெரியவில்லை…

ஆனால் அது உன் இதயத்தில் இருப்பது
உனக்குத்தெரியவரும் நாளில்,,,
நீ இதுபற்றியெல்லாம் என்னிடம்
ஒன்றும் கேட்கப்போவதுமில்லை…….