நாகேந்திர பாரதி/நோய் போகும் பாதை



( மருத்துவர் தினத்தை முன்னிட்டு )

இனிப்புருண்டைப் பொடியோடு
ஹோமியோபதி வைத்தியம்

கசப்புருண்டை லேகியத்தில்
சித்த வைத்தியம்

மாத்திரையும் ஊசியுமாய்
ஆங்கிலேய வைத்தியம்

மருந்தும் வைத்தியமும்
மாறி மாறி வந்தாலும்

அன்போடு அதைக் கொடுத்து
ஆதரவாய்ப் பேசுகின்ற

செவிலியரின் புன்சிரிப்பே
நோய் போகும் பாதையெங்கும்

——