அழகியசிங்கர்/மருத்துவரா மருந்தா

எப்போதும்
நான் விரும்புவதில்லை
மருத்துவர்களைப் பார்க்க
ஆனால் அவர்கள்தான்
பல உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள்
இன்னும்
கொஞ்சம் வயதாகட்டும்
அப்போது பார்த்துக்
கொள்ளலாமென்று
நினைத்துக்கொள்வேன்

ஆனால்
இன்று மருத்துவர்
தேவைகளைவிட
மருந்துகளின் தேவை
அதிகம்

பலர்
மருத்துவர்களிடம்
போகாமலயே
மருந்துக் கடைகளில்
மருந்து சாப்பிடுகிறார்கள்

நானும் மருத்துவரை
நாடாமல்
முன்பு பரிந்துரைத்த
மருந்துகளை
விழுங்கிக் கொண்டிருக்கிறேன்