
நான் தனியா?
யார் சொன்னார்கள்?
என்னுடன் அவள்
இருக்கையில்
ஏது தனிமை?
மீன் விழியால்
வலையில் சிக்க வைத்தவள்
தேன் மொழியால்
நெஞ்சத்தை கிள்ளியவள்
என்னுடன் இருக்கையில்
ஏது தனிமை?
பள்ளிக்கு செல்லும்
பிள்ளை போல
அள்ளி எடுத்து
அணைத்தவள்
அறியாத கலைகள்
அறிய வைத்தவள்
என்னுடன் இருக்கையில்
ஏது தனிமை?
மின் மினியை போல
கண் சிமிட்டி
என் உள்ளம் திருடிய
கள்ளி அவள்
என்னுடன் இருக்கையில்
ஏது தனிமை?
கண்ணாடியில்
பார்த்தேன்
கண்ணுக்குள்
தவழ்ந்தாள்
விண்ணுக்குள் நட்சத்திரமாக
மண்ணுக்குள்
வைரமாக
அவள் தெரிந்த பின்
ஏது தனிமை?
மின்னல் போல் ஒளிர்ந்தாள்.
கன்னத்தில் முத்தமிட்டு மறைந்தாள்.
மல்லிகை போல் விரிந்தாள்.
முத்து போல் சிரித்த பல் அழகி
என்னுடன் இருக்கையில்
ஏது தனிமை?
