செ.புனிதஜோதி/வட்டம் தானே

அவள் கவிதையைப்
படித்தேன்
எனக்கு எழுதியது போலிருந்தது

அதை வைத்துக்கொண்டு
என்னையும்,
அவளையும்
என்ன தீர்மானித்து
விடமுடியும்?

என்னிடத்திலும்
அவளுக்கு சொல்ல
பல உண்டு

ஒருத்தரை
ஒருத்தர்
சொல்லிக்கொள்வதில்
நிறைவு கொள்ள முடியாதென
நிறைவைத் தேடும்
கவிதை நினைத்து விட்டால்
என்ன செய்யமுடியும்?

இதுவரை
களமாடியச் சொற்கள்
மண்ணை
கவ்வும் முன்..

அது..அது அப்படியாகவே இருக்கட்டும்
உலகம் என்பதும்
வட்டம் தானே.