சிறகு இரவி/திப்பசந்திரா ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில்

பக்தி உலா

மாலை பராக்குக்கு கிளம்பும்போதே லேசான தூவானம். நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் நாரணன் துணை இருந்தால் என்று துணிவுடன் தலக் கவரிங் இல்லாமல் புறப்பட்டோம். சொட்டு சொட்டு என மழை. சொட்ட சொட்ட நனைந்தது தலை. குளிர் குல்லாய் நனைந்து, சொற்ப கேசமும் ஈரம்.
நனைந்து, நின்று, நடந்து ஈர வீரனாய் சென்ற இடம் ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில்.
புது திப்பசந்திரா அருகில் உள்ள பகுதி தான். மழை நச நாசப்பில் தொலை தூரமாய்.. வழியில் செக்கு எண்ணை சிவலிங்கம் மார்க் வெந்தயம் ஒரு கிலோ சி எம் பச்சரிசி என அடுக்கி தோள் பையில் பதுக்கி சாய் கோணத்தில் நான் நடக்க கோதண்ட ராமர் தம்பதி தம்பியுடன் வரவேற்றார். காலடியில் ராம தூதன். கண்ணாடி அறையில் கண்ணன் பாமா ருக்குவுடன். வட்ட ஸ்தூபி மேல் நவ கோள்கள். வாசலில் கருடாழ்வர். பட்டர் வடகலை நாமாத்துடன் சொல்லற்று தீபம் காட்டினார். தீர்த்தம் சடாரி பிரதட்ஷணம். சந்தோஷம்.
மழை வலுக்க அவன் குடையின் கீழ் சிரம பரிகாரம். தூறல் நின்னு போச்சு என்றானவுடன் பூர்ணிமா புருஷனாய் கிளம்பி, கிடாம்பி போல தட்டு தடுமாறி வீடைந்தோம்.
தினம் ஒரு கோயில் எனும் பரணிதரனாக மாற்றி விட்டது இந்த பத்து நாள் பயணம். போகிற வழிக்கு புண்ணியம்.
இந்த கோயிலும் ரெட்டியார் ஏற்பாடு. சின்ன கல்யாண மண்டபமும் உண்டு. அறக்கட்டளை என்றால் ரெடி சொல்வர் ரெட்டிகாருகள். இனி ஸ்
அவர்கள் காருண்ய காருக்கள் என அழைக்கப் படுவர்.
திப்ப சந்திராவில் பல கடைகளில் தமிழ் பேசும் ஆட்கள். வாடிக்கையாளர்களும் தமிழ். எங்கும் இனிக்கும் தமிழ். சேலை கடையில் முதலாளி தொழிலாளி சேட்டு. ஒலிக்கும் தமிழ் போனஸ் !
சிப்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸர் என தனி பொதி! வூட்ல பஜ்ஜி கேட்டா வறுத்துடுவாங்க இல்லே!

3 Comments on “சிறகு இரவி/திப்பசந்திரா ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில்”

    1. செம்ம flow surahi Ravi sir.

      நனைந்து, நின்று, நடந்து ஈர வீரனாய் சென்ற இடம் ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில்.

      வழியில் செக்கு எண்ணை,
      சிவலிங்கம் மார்க் வெந்தயம்,
      ஒரு கிலோ சி எம் பச்சரிசி
      என அடுக்கி தோள் பையில் பதுக்கி
      சாய் கோணத்தில் நான் நடக்க
      கோதண்ட ராமர் தம்பதி
      தம்பியுடன் வரவேற்றார்.

      அதுதான் சொல்கிறேனே “செம்ம”

    2. செம்ம flow Siragu Ravi sir.

      நனைந்து, நின்று, நடந்து ஈர வீரனாய் சென்ற இடம் ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில்.

      வழியில் செக்கு எண்ணை,
      சிவலிங்கம் மார்க் வெந்தயம்,
      ஒரு கிலோ சி எம் பச்சரிசி
      என அடுக்கி தோள் பையில் பதுக்கி
      சாய் கோணத்தில் நான் நடக்க
      கோதண்ட ராமர் தம்பதி
      தம்பியுடன் வரவேற்றார்.

      அதுதான் சொல்கிறேனே “செம்ம”

Comments are closed.