
04.07.2024 – வியாழக்கிழமை
ஆசிரியர் பக்கம்மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : வணக்கம்
அழகியசிங்கர் : நேற்று பட்டினத்தார் கோயில் போய் பார்த்தோம்.
மோகினி : என்ன திடீரென்று?
அழகியசிங்கர் : பட்டினத்தார் பாடல்களை விரும்பிப் படிப்பேன்.
மோகினி : பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு படிக்க நம்ப முடியாமல் இருக்கும்.
அழகியசிங்கர் : நம்ப வேண்டும் என்பது அவசியமில்லை . அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றைப் படித்தாலே போதும். அவர் சொல்கிற தத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
ஜெகன் : உங்களுக்கு முழுதாக அவர் பாடல்களைத் தெரியுமா?
அழகியசிங்கர் : தெரியாது. இனிமேல்தான் படிக்கப் போகிறேன். எடுத்து வைத்திருக்கிறேன். 24.12.1996 ல் வாங்கிய புத்தகம் கிடைத்தது. செல்லரித்துப் போன நிலையில் கிடைத்தது. வர்த்தமான பதிப்பகம் கொண்டு வந்த புத்தகம்.
ஜெகன் :வள்ளலாருக்கும், பட்டினத்தாருக்கும் ஒரு ஒற்றுமை இருவருக்கும் சமாதி கிடையாது.. வள்ளலார் அறையிலிருந்து மறைந்து விட்டார். பட்டினத்தார் கடற்கரையில் அடிக்கரும்பின் இனிப்பைச் சுவைத்தவுடன் சிவனுடன் ஐக்கியமாகிவிட்டார்.
அழகியசிங்கர் : ஒரு இடத்தில் அவருடைய தமக்கை விஷம் வைத்த ஆப்பத்தை அவருக்குச் சாப்பிடக் கொடுக்கிறாள். ஞான திருஷ்டியில் இதை அறிந்த பட்டினத்தார். தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்றபடி வீட்டின் மேல் நஞ்சு அப்பத்தை வீச, வீடு பற்றி எரிந்தது. தாயார் மறைந்ததை அறிந்து ஓடிச் சென்று பாடல்கள் பாடி, தாய் சிதைக்குத் தீமுட்டி, சடங்குகள் செய்தார்.
மோகினி : நீங்கள் அவர் வரலாற்றை உங்கள் ஆன லைன் பத்திரிகையில் வெளியிடுங்கள்.
அழகியசிங்கர் : அப்படிச் செய்வதாக இருக்கிறேன்.
மோகினி : சித்தர்களைப் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை.
அழகிய சிங்கர் : நாராணோ ஜெயராமன் ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறார் நான்கு பாகங்கள். நஹண்ய்ற்ள் ஹய்க் நஹஞ்ங்ள் ர்ச் ஐய்க்ண்ஹ .மூவாயிரம் கொடுத்து இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்திருக்கிறேன். ஜெயராமனிடமிருந்து 2015ல் விலைக்கு வாங்கிய இப் புத்தகத்தை இப்போதுதான் படித்துப் பார்க்கலாம் என்று முதல் பாகத்தை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்
ஜெகன் : நல்ல முயற்சி.
அழகியசிங்கர் : ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை அவ்வளவு சுலபமில்லை. இருந்தாலும் படிக்க வேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறேன்.
ஜெகன்: இன்னும் நாளை பேசலாம்.
மோகினி : இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம்.
(பதிவான நேரம் : இரவு 10.36)
