விஞ்ஞானி/உன் கண்ணில்….


கருநீல வானில் ஒரு
எரிநட்சத்திரம் உதிர்ந்தது

வான் பறவையிடமிருந்து
சிறகு பிரிந்து உதிர்ந்தது

நாவல் மரத்திலிருந்து
கருங்கனிகள் உதிர்ந்தன

மலர்ந்த ரோஜாவிடமிருத்து
இதழ்கள் உதிர்ந்தன

குழந்தை உதடுகளிலிருந்து
அமுதம் வழிந்து உதிர்ந்தது

இவை அனைத்தும்
காரணம் அறிந்தவை
அறியாதது
உன் கண்கள் உதிர்க்கும்
கண்ணீருக்கான ஆயத்தம்.