
கனவுகளுக்குள்
வீட்டை கட்டி வாழ்பவள்
ஒரு நத்தையைப்போலத்தான்
ஊர்ந்து,ஊர்ந்து
ஊர் முழுதும்
அலைந்து பார்க்கிறாள்
தான் பெற்றப்பிள்ளை
தன்னை புறக்கணிப்பதைப்போல்
தள்ளி,தள்ளி போகிறது
அவள் வானத்தில்
அமைத்த
நட்சத்திரம்
கைஇருப்புக்குள் தான்
தன் கோட்டையை
கட்டவேண்டுமென
இந்த
கனவுகளுக்கு
மட்டும்
எப்போதும்
தெரிவதில்லை
