விஞ்ஞானி/கரையான் புற்று

புதர்களை அகற்றி
மனையை சுத்தம்
செய்கையில்
கரையான் புற்று
ஒன்றை கண்டனர்.

பாம்பு இருக்கக்கூடும்
என்ற எச்சரிக்கையுடன்
வெட்டி அகற்றுகையில்
அதில் பாம்பு இல்லை
செந்தலை கரையான்கள்
சில கண்ணில் பட்டன.

ஒரு பாம்பின் எலும்புக்கூடு
நைந்து கிடந்தது
ஒருவன் சொன்னான்
இது கரையான் புற்றில்லை
போராளிகள் கூடாரம் என்று.