நியாண்டர் செல்வன்/ங்களிடம் புகாட்டி வெய்ரான் (Bugatti Veyron) கார்

உங்களிடம் புகாட்டி வெய்ரான் (Bugatti Veyron) கார் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுக்கு நீங்க ஆயில் மாற்றணும். அதுக்கு கொஞ்சம் செலவு ஆகும்.

“கார்னா ஆயில் மாத்திதான் ஆகணும். யானை வாங்கிட்டு அங்குசம் வாங்க அழலாமா”னு சொல்ல வேணாம்.

ஏன்னா புகாட்டி வெய்ரான் காருக்கு ஆயில் மாற்றுவதுக்கு ஆகும் செலவு அப்படி. எவ்ளோ செலவு ஆகும்னு அடுத்த பத்தில சொல்லபோறேன். தண்ணி, கிண்ணி குடிச்சு ஆசுவாசபடுத்திகுங்க. மயக்கம் வந்தாலும் வரும்

ரைட்டு…ஆயில் மாற்ற ஆகும் செலவு ₹25 லட்சம்

மயக்கம் போட்டு விழுந்தாச்சா? எந்திரிங்க. இதுக்கு தான் முன்னமே சொன்னேன்.

ஆயில் மாத்த எதுக்கு இத்தனை செலவு? தங்கத்தை கரைச்சு எஞ்சின்ல ஊத்தறாங்களா என்ன?

அந்த காரின் டிசைன் அப்படி. எஞ்சினை திறக்க கிட்டத்தட்ட பல டெக்னிசியன்கள் பல நாட்கள் உட்கார்ந்து வேலை செய்யணும். பல சமயம் எஞ்சினை தொட ஒட்டுமொத்த காரையே அசெம்பிள் பண்ணகூட நேரும். அதற்கான ஆயில் பில்டர் விலையும் அதிகம்

ஆயில் மாத்தவே இத்தனை செலவு. டயரை மாத்த எவ்ளோ ஆகும்?

அதிகம் இல்லை லேடிஸ் & ஜென்டில்மென். ஒரு டயர் சுமார் ₹27 லட்சம் தான். ஒரு கோடி மற்றும் சில்லறையுடன் போனிர்கள் என்றால் நாலு டயரையும் மாற்றிக்கொன்டு வந்துவிடலாம்.

எஞ்சின் மாற்ற, ரிப்பேர் ஆனால் எவ்ளோ செலவு ஆகும்னு எல்லாம் யோச்சிச்சுகுங்க. வீட்டு பத்திரம், தோட்டம், துறவு இருந்தால் கையோட கொண்டுபோயிடுங்க. எதாவது மிச்சம் மீதி இருந்தால் கொடுப்பாங்க. டீ, காபி செலவுக்கு உதவும்

ஆத்தீ..எனக்கு காரே வேண்டாம், நடந்தே போயிடறேன், சைக்கிள்ள்ல போறேன்னு சொல்றீங்களா? நியாயம் தான்.

எதுக்கு இந்த காருக்கு இந்த விலை?

எல்லாம் #பிசினஸ்_பிஸ்தாக்கள் உத்திதான். வோல்க்ஸ்வாகன் கம்பனி 1998ம் ஆண்டு மணிக்கு 500 கிமி வேகத்தில் போகும் காரை தயாரிக்க ஆசைப்பட்டது. ஆயிரம் ஹார்ஸ் பவர் எஞ்சினுடன் கார் 2001ம் ஆண்டு தயரானது.

அடுத்த பத்து ஆண்டுகள் காரை விற்பனைக்கு கொண்டுவராமல், உலகெங்கும் எடுத்து சென்று பாலைவனங்கள், ரேஸ் மைதானங்களில் மணிக்கு 500 கிமி வேகத்தில் ஓட்டி காட்டினார்கள்.கார் ஷோக்களில் கண்காட்சிக்கு வைத்தார்கள்.

“என்ன விலைன்னாலும் காரை வாங்கறேன்னு” பலர் முண்டியடிக்க, பேரை குடுத்துட்டு போங்க, பார்ப்போம்னு சொன்னாங்க. பலரும் பத்தாண்டுகளுக்கு மேல் காத்திருந்தாங்க

அதன்பின் கார் ஆர்வம் கொண்ட பிரபலங்களை இவர்களே அணுகினார்கள். “450 கார்கள் மட்டும் தான் உற்பத்தி செய்கிறோம். அதன்பின் கம்பனி இழுத்து மூடப்படும். ஒரு கார் விலை 140 கோடி முதல் 300 கோடி வரை. வேணும்னா சொல்லுங்க. வாங்காம விட்டுட்டால், அதன்பின் அய்யோனாலும் வராது, அம்மானாலும் வராது..”

கார் விற்று தீர்ந்தது. கால்பந்து வீரர் ரொனால்டோ, பாடகர் ஜேஸி என பலரும் வாங்கினார்கள். “எனக்கு புகாட்டி வெர்யான் கார் வாங்க இன்விடேசன் வந்தது. வாங்கி போட்டிருக்கேன். உனக்கு வரலை போல” என பார்ட்டிகளில் பெருமை பேசினார்கள்.

சொன்னதுபோல் 450 கார்கள் விற்றன. காரின் உற்பத்தி நிறுத்தபட்டது

இத்தனை செலவு செய்து காரை வாங்கிய பிரபலங்கள் என்ன செய்கிறார்கள்?

கராஜில் நிறுத்திவைத்துவிட்டு பார்ட்டிகளுக்கு கொன்டுபோகிறார்கள். மணிக்கு ஐநூறுகிமி வேகத்தில் எங்கே போய் காரை ஓட்ட? பார்ட்டிகளுக்கு ஓட்டிபோய் வேண்டுமானால் பந்தா பண்ணலாம். அவ்ளோதான்

பந்தாவில் தானே உலகமே இயங்கிகிட்டு இருக்கு?

~