பாப்லோ நெருடா பிறந்த தினமான இன்று அவர் கவிதை

வினாக்கள்


*ஒரு பெரிய விமானம் தன் குட்டிகளோடு
ஏன் வட்டமிட்டுப் பறப்பதில்லை

*முழுநிலா தனது மூட்டை மாவை
எங்கே விட்டுச் சென்றது

*பள்ளிக்கு நேரம் கழித்து போகும்
தூக்கணாங் குருவிக்கு என்ன நேரிடுகிறது

*பியரில் வழிந்து நழுவும் நுரையை
நாம் அளப்பது எப்படி

*நீங்கள் உணரவில்லையா கடலின்
சிரிப்பில் உள்ள ஆபத்தை

*எல்லா நதியிலும் நீர் இனிப்பென்றால்
கடல் எங்கிருந்து தனது உப்பைப் பெற்றது

*ரோஜா உண்மையாகவே நிர்வாணமாயிருக்கிறதா
இல்லை அது உடை உடுத்தித்தான் அப்படியா

*எனக்குள் இருந்த குழந்தை எங்கே
இருக்கிறதா போய் விட்டதா

*இறந்து போன தனது வீரர்களை
எந்த எண்களால் எறும்புகள் கணக்கு வைக்கின்றன
.

[மொழியாக்கம் ..ஈரோடு தமிழன்பன் ]