
-ஒருதிருப்புமுனைக்கு வந்து நின்றால்பழையபடி வாழ இனி ஆகாது.தன் திறமையின் உச்சம் இது. இதுதாண்டி ஏதுமில்லை என்ற மனோபாவம் வந்துவிடும்.ஆன்மிகப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் அவர்களை இந்தப் பட்டியலில்தான்சேர்க்க வேண்டும்.
கடைசிவரை இந்தப்பாதையிலேயே பயணம்செய்வதில் அலுப்பு ஏற்பட்டதில்லை.பித்துக்குளி முருகதாஸின் சங்கீதம் உயர்ந்ததா இல்லையா என்ற கேள்விகளுக்கு இடமே இல்லை.இவருக்கென ஒரு ரசிகர்குழாம் இருந்தது.கச்சேரியும் இல்லாதபஜனையும் இல்லாத ரெண்டுங்கெட்டான்சமாச்சாரத்தை எந்த ஆய்வுகளுமின்றிஏற்றனர். அதுவும் ஆன்மிகப் பரப்பில்கேள்விகளுக்கு இடமே இல்லை என்றவிநோதம்
இங்குண்டு. வசனத்தையேதன் ஹார்மோனியப்பெட்டிவழியாக ஒருசங்கீதமாகப் பொழிந்தார்.ஒரு கட்டைக்குரல் நிறையபேரை வசப்படுத்தியது.இந்த யுக்தி ஐயப்பன் சரண கோஷத்தைஇசையாக ஏற்றதிலிருந்து தொடங்கியது.தலையில் காவித்துண்டு, கண்களில்கூலிங்கிளாஸ்,விபூதி,சந்தனக் குங்குமநெற்றியலங்காரம் இவருக்குத் துணைபுரிந்தது.ஒரு நினைவு வைத்துக்கொள்ளத்தக்க பிராண்ட்.
கோயம்புத்தூர்ப் பக்கம்மிருந்த பாலசுப்ரமணியம் பித்துக்குளி முருகதாஸானகதைகள் நிறையவே உள.இளமையில் துறவில் ஈடுபாடு.நாடோடியாய் ஊர்சுற்றுதலில் நாட்டம்.
இயல்பான இப்படியொரு காவிவாழ்க்கை கவனிக்கவைத்தது.கவனத்தை ஈர்த்தது.சிறுவயதில் பிரம்மானந்தப் பரதேசியார் என்ற சாமியார்மேல் கல்லெறிந்து அவர்கண்களிலிருந்து ரத்தம்வழிய உனக்குஎன்போலவே ஒருகண்போய் பித்துக்குளியாய் அலைவாய் என்று சபித்தாராம். முருகபக்தராக இருந்த பாலு பித்துக்குளிமுருகதாஸ் ஆனாராம். இரமணமகரிஷிபோன்றவர்களிடம் அடைக்கலமானார்.
திருப்புகழ்மணி,,தொடர்பு,தீனபந்து ஆச்ரமம் என்றும் ஈடுபாட்டோடு அலைந்துமுரட்டு முருகபக்கராகத் தம்மை ஆக்கிக்கொண்டார். ஒரு பழைய பெரிய டபுள் ரீடு ஹார்மோனியப்பெட்டியோடு புதுவித இசையை நெடுகப் பரவவிட்டு முருகனடிமையாகத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார்.
பித்துக்குளி பாணி என்ற ஒன்றேஉருவானது. முக்கால் நூற்றாண்டுகள்ஓயாத சங்கீதம். காந்தியடிகள்மேல் ஈடுபாடுகொண்டு பலபோராட்டங்களில் கலந்துகொண்டார். குறிப்பாக உப்புச் சத்யாக்கிரகம். போலீஸ் தாக்குதலில் ஒருகண் போனது. ஆறுமாதம் சிறைவாசம். தேசத்திற்காக ஓர்முருகபக்தர் தம்மை ஈடுபடுத்திக்கொண்டது
அவரது தியாகத்தை வெளிப்படுத்தியது.கலைமாமணி,தியாகராஜர் விருதுஎன விருதுக்குப் பஞ்சமில்லாமல் வாங்கினார். ஓரு திரைப்படத்திற்குப் பாடல் எழுதி இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்
.”அலைபாயுதே கண்ணா..”பாடல் ஊத்துக்காடு வேங்கடகவி என்ன நினைத்துப் பாடினாரோ நம்மபித்துக்குளியிடம் அலைபாயும். கானடாராகக் கட்டுக்குள் அடங்காது புரண்டுபுரண்டு வரும்.ரசிக்க ஏராளமான சனத்திரள் இருக்கையில் யாருக்குப்பயப்பட வேணும்.
“ஆடாதுஅசங்காது வா கண்ணாவும் இந்த ரகம்தான்.ஹார்மோனியத்துக்குள் புகுந்துபுகுந்து ரகளைபண்ணும். நடுநடுவே பித்துக்குளி முருகதாஸ் குரல் கொடுத்து கண்ணா ஆ ஆ.கண் ணா ஆ ஆ..” இழைவார்.”பச்சை மயில் வாகனனே”
கந்தனின் நாமமே..’ஏறுமயில் ஏறு ” கஜமுக கஜமுக’ “திருப்பரங்குன்றம்..’ “கருவின் உருவே” நந்தகுமாரா..” என்று கிட்டத்தட்டஆயிரம் பாடல்கள்.”
வெள்ளைத்தாமரைப்பூவிலிருப்பாள்.. “பாடல் இவர் பாணியில்பாட ரகளையாக இருக்கும்.மகாகவி இருந்து கேட்டிருந்தால் துள்ளிக்குதித்திருப்பார். “அம்மா அம்மா.. “என்று உருகுவார். ஹார்மோனியம் கமகத்திற்கு உதவாது என்று அகில இந்தியவானொலி,பிராச்சீன சங்கீதசபாக்கள் உள்ளே நுழையவே விடவில்லை.
இவர் கவலைப்படாமல் ஸ்வாகதம் க்ருஷ்ணா… ஸ்வாகதம் க்ருஷ்ணா என்றும் ஸ்வாமியேய் கந்த ஸ்ஸ்வாமியேய் “அவர்பாட்டுக்குப் பாடிக்கொண்டிருந்தார்.என்ன காரணமோ கட்டிகாத்த சந்நியாசநெறியைத் தன் அறுபதாவது வயதில் தூக்கியெறிந்துவிட்டு தேவி சரோஜா என்ற மாதுவைக் கரம்பற்றினார். இந்த தேவிசரோஜா சங்கீத விற்பனர்.ராதா கல்யாண மகோத்சவத்தைக் கையிவெடுத்து இணைந்து பிரமாதப்படுத்தினர். நம் சங்கீதத்திற்கு பித்துக்குளியும் அவருடையஹார்மோனியப்பெட்டியும் சரிவராது எனஒதுக்கியவர்களையும் மீறி அவரது இசைநெடுகிலும் முழங்கியது.ஒரு தைப்பூசநன்நாளில் பிறந்து கந்தசஷ்டியில் காலமானது கந்தன் உவந்ததால் என்பதுகூடச்சரியாக இருக்கலாம்.

நாவி யின் சிறப்
பான பதிவு
.