தினமும் அம்மன் 2

தகவல் : தினமலர்

குழப்பம் தீர

ஒரு செயலை. செய்வோமா…. வேண்டாமா…
என மனம் குழம்புகிறதா….. தர்மபுரிக்கு அருகில் உள்ள நல்லம்பள்ளி. ‘கரூர் மாரியம்மனிடம்’ பூவாக்கு கேட்டால் குழப்பம் தீரும்.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் காலத்தில் உருவான கோயில் இது . முன்பு. கரூரில் இருந்த இந்த அம்மன் கோபித்துக் கொண்டு இங்கு வந்தாள். இன்னும் அவளின் உக்கிரம் தனியவில்லை. திங்கள், வெள்ளி அன்று சிறப்பு பூஜை நடக்கிறது. நிலம் வாங்க , வீடு வாங்க. கல்வி வேலை வாய்ப்பு , திருமணம் என அனைத்திற்கும் பூவாக்கு கேட்டு உத்தரவு பெறுகின்றனர். அம்மை, கண் நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் தீர அபிஷேக தீர்த்தத்தை தலை மீது தெளிக்கின்றனர். அம்மன் அருளால் வேண்டுதல் நிறைவேறியவர்கள் பொங்கல் படைத்து , எலுமிச்சை மாலை சாத்துகின்றனர்.

எப்படி செல்வது.

தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து. நாலு கிலோ மீட்டர்.

நேரம் காலை 7 லிருந்து 12 மணி வரை.
மாலை 4 லிருந்து 8 மணி வரை.
தொடர்புக்கு:

9751181621