
கூரைத் தீயின் ஓரச் சிவப்பு
வேடிக்கை காட்டியது
வினாடி நேரம்தான்
விறுவிறென்று மேலேறி
விழுந்ததும் தெரிந்தது
தீ சுடும் என்று
தோல் எரிந்து கரியாகி
துவளும் போது
பஞ்சு மிட்டாய் வாங்கி வரும்
அப்பா நினைப்போடும்
பாடம் சொல்லித் தரும்
அம்மா நினைப்போடும்
தோளில் தூங்க வைக்கும்
தாத்தா நினைப்போடும்
பக்கத்தில் படுத்திருக்கும்
பாட்டி நினைப்போடும்
துடிதுடித்தபடியே
தூங்கிப் போனோம்
