தமிழில் : க.மோகனரங்கன்

கவிஞன் என்பவன்
சிறந்த சிகிச்சையாளன் என்றும் கருதப்படுகிறது.
அந்த வகையில்
கவிதைச் செயல்பாடானது பேயோட்டுதல்,
செப்பிடு வித்தை காட்டுதல்
ஆகியவற்றோடு கூடுதலாக,
பழுது நீக்கும் பணியுடனும்
சம்பந்தப்பட்டிருப்பது.
ஒரு கவிதையை
எழுதுவது என்பது
அடிப்படையான காயத்தை,
அதன் கண்ணீரை சரிசெய்வதாகும். ஏனெனில் இங்கே நாம்
எல்லோருமே காயமடைந்துள்ளோம்.
