தொகுப்பு : ஸ்ரீதர் சாமா/ஒரு ஆன்மிக சிந்தனை



(இணையத்தில் படித்தது. பகவான் ரமணர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் )

புண்ணிய பாபங்கள் போக எளிய வழி

பகவான் ஒரு கோடைக்காலத்தில் மாலை நேரம் காற்றோட்டமாக ரமணாஷ்ரமம் கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார் . அன்பர்கள் தொலைதூரத்தில் தெரியும் அருணை மலை அழகை அவர் விவரிப்பதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு அன்பர் அவர் முன்னே தோன்றினார். அவர் முகம் அழுது அழுது சிவந்திருந்தது.
"பகவானே, நான் மகா பாபி . எனக்கு விடிவே இல்லையா ?"
"யாருப்பா நீ ? ஏன் அழறே ?"
"பகவானே , நீங்களும் என்னைக் கைவிட்டா நான் எங்கே போவேன்?"
"நான் உன்னைப் பார்த்ததே இல்லையேப்பா . நான் என்ன உன் குருவா ? உன்னைக் கரையேத்தறதா சொன்னேனா ?"
"என்னைக் காப்பாத்துங்க பகவான் . நீங்க ஏத்துக்காட்டாலும் நீங்க தான் என் குரு. "
"சரி . அப்ப என் குரு தட்சணை எங்கே ?"
"நான் என்ன தர முடியும் குருநாதா . நீங்க எதையும் ஏத்துக்க மாட்டீங்களே "
"அப்படின்னு உன்கிட்ட சொன்னேனா?"
"பகவானே நீங்க என்ன கேட்டாலும் தரேன் "
"அப்ப சரி. நீ இதுவரை செஞ்ச புண்யமெல்லாம் எனக்குக் கொடு "
"நா மருந்துக்குக் கூட புண்ணியம் செய்யலையே பகவான் "
"தர்றியா இல்லையா?"
"எப்படித் தர்றது குருதேவா?"
"நான் மனசார நான் செஞ்ச புண்ணியமெல்லாம் பகவானுக்குக் கொடுத்துட்டேன்னு சொல்லு "
வந்தவர் சொல்றார்.
"சரி . இப்ப நீ செஞ்ச பாபமெல்லாம் கொடு"
"அபச்சாரம் குருதேவா. குரு சாபம் வரும். நான் இந்த ஜென்மால செஞ்சதெல்லாம் பாபம் தான் "
"குரு தானே கேட்கறேன். கொடு "
"பகவான். நெஜமாத்தான் கேக்கறீங்களா?"
"ஆமாம் "
வந்தவர் மனசாரக் கொடுக்கிறார்.
"சரி. நீ இப்ப புது மனுஷன். உன்கிட்ட புண்ணியமும் இல்லை . பாபமும் இல்லை. சந்தோஷமா போ "
அவர் போனார். அதுவே அவரை மற்றவர்கள் பார்த்த கடைசி தடவை .

One Comment on “தொகுப்பு : ஸ்ரீதர் சாமா/ஒரு ஆன்மிக சிந்தனை”

Comments are closed.