புனித ஜோதி கவிதை

ஓடி,ஓடி
தேடி அலைந்த
பிறை
தன்னில்
பௌர்ணமியைக்
கண்ட பெருமிதம்…

ஒற்றையடிப்பாதை
தன்னில்
இரு திசைகள்
உணர்ந்த
தருணம்…

ஒரு இருண்மையை
கைப்பிடித்து
நடக்கையில்
தன்னிலிருந்தே
புறப்பட்டக்
கலங்கரை
விளக்கம்

இங்கே
பாதைகள்
எல்லாம்
நமக்குள்
பார்க்கும் விதத்தில்
ஆயிரம் ஓட்டைகள்