
தாழ்மையான மற்றும் சாந்தகுணமுள்ள மகரிஷி ஏழைகளுடன் அடையாள படுத்திக் கொள்ளுதல்.
ஒரு நாயிடமிருந்து ஒரு அணிலை காப்பாற்ற முயன்றபோத தற்செயலாக மகரிஷியின் கழுத்தெலும்பு உடைந்தது. கழுத்தெலும்பு குணமடைய சிறிது காலம் பிடித்தது. இந்த விபத்தும் கூட அவரை கணிசமாக பலவீனப்படுத்தியது. அது எளிதாக குணமடையவில்லை, ஆனாலும் மகரிஷி தனது தீவிர பக்தரான டி.பி.ஆர் உடன் மதிய உணவு முடிந்ததும் ஸ்கந்தஸ்ரமத்திற்குச் செல்வதாக அறிவித்தார்
மகரிஷியின் பலவீனமான ஆரோக்கியமும் அத்தகைய பயணத்தை தாங்க முடியாததாக ஆக்கும் என்று அவரது இரண்டு சீடர்கள் பயந்தனர். அந்த சந்தேகத்தால் அவர்கள் அவருக்கு பின் சென்று பார்த்த பொழுது மகரிஷி மெதுவாக, தனது உதவியாளர் ரங்கசாமியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
எப்படியோ மகரிஷி கடுமையான வெயிலில் மூன்று மணிநேரங்களுக்குப் பிறகு, அவர்களின் உதவியுடன் ஸ்கந்தஸ்ரமத்தை அடைய முடிந்தது. அவர் ஏன் அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. விரைவில் அவர்கள் அந்த காரணத்தைக் கண்டுபிடித்தனர். ஒரு தனி மேஸ்திரி அங்கு சில கட்டிட வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். மகரிஷி அவரிடம்,
“நான் உங்களுக்காக வந்தேன். உங்கள் வேண்டுதல் என்னை இங்கே இழுத்து வந்தது. ”
மேஸ்திரியின் பிரார்த்தனை என்ன என்பதை மகரிஷியே விளக்கினார். “உங்களுக்குத் தெரியும், நான்கு நாட்களுக்கு முன்பு, புதிய மண்டபத்திற்கான தூண்களை உயர்த்துவது தொடர்பாக ஆசிரமத்தில் ஒரு சிறப்பு வழிபாடு இருந்தது. மருத்துவரின் அனுமதியுடன் ஸ்தபதி என்னை அங்கு அழைத்துச் சென்றார். பலர் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் இந்த மேஸ்திரி. அவர் மனதிற்குள் வேண்டினார், ‘இந்த மண்டபத்தை நிர்மாணிக்கும் இந்த மக்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! அவர்களின் வேலையைப் பார்க்க மகரிஷியே வந்துவிட்டார். இத்தகைய நோயாளியாக இருக்கும் மகரிஷி கவனிப்புடன் நான் ஸ்கந்தஸ்ரமத்தில் செய்து வரும் வேலையை எப்படி வந்து பார்ப்பார்? அவர் ஸ்கந்தஸ்ரமத்திற்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. அவர் இப்போது அவ்வாறு செய்வார் என்று நம்புவது மிகையாக இருக்கும். எவ்வளவு அருமையாக இருக்கும் அவர் வந்து எனது வேலையை பார்வையிட்டால் ’.
பக்தர்கள் தங்களது வேண்டுகோளை வாய் விட்டு சொல்ல வேண்டியதில்லை…
“வேண்டத்தக்கது அறிவோய் நீ” என்று மாணிக்கவாசக பெருமான் பாடியதுதான் நினைவிற்கு வருகிறது…
மேஸ்திரி, மகரிஷி தன் பொருட்டு ஸ்கந்தாசிரமம் வந்ததை எண்ணி ஏழாவது சொர்க்கத்தில் இருந்திருப்பார் என்பது சொல்லவும் வேண்டுமோ.
அருணாசலேஸ்வரா.
🙏🏻🙏🏻🙏🏻

One Comment on “மகரிஷி ஏழைகளுடன் அடையாள படுத்திக் கொள்ளுதல்/ரமேஷ் கண்ணன்”
Comments are closed.