
ஒரு சிறிய கல் அல்லது
ஒரு சிறிய தடுப்பு ஏதுமின்றிக்
காற்றுக்குப் படபடக்கிறது
ஒரு சிறிய கதவு.
யாரும் உட்புகவில்லை
யாரும் வெளியேறவும் இல்லை
காற்றும் நிற்கவில்லை.
கைகட்டி நிற்கின்றன
வீடும் பொதுவெளியும்.
காரணமும் காரியமும் அறிந்து
சிரிக்கும் தச்சன்
தயாராக வைத்திருக்கிறான்
மேலும் 365 தாழ்ப்பாள்கள்.
