
பெண்டுலத்தின்
ஆட்டம்
கடிகாரத்தின் விசையால்
நாட்காட்டியின்
படபடக்கும் ஓசை
காற்றின் திசையால்
அண்டை வீட்டுக்காரியின்
ரோஜாச்செடியும்
என் வீட்டிற்குள் கிடக்கிறது
நிழலால்
வாழ்ந்தே
தீர வேண்டும்
கட்டாயத்தில்
இரு வேறு உயிர்கள்
இங்கு
எல்லாம் அப்படித்தான்
ஒருவரின் கைப்பிடிக்குள்
ஒருவரின் வாழ்க்கை
சுயம் தேடி
நிற்பவையெல்லாம்
அல்லாடிக் கொண்டிருக்கிறது
பட்டமாய்
பாரபட்சமின்றி
விழுங்க காத்திருக்கிறது
ஆறடி மண்.

super