தங்கேஸ்/அழுவது ஏனென்று தெரியாது…

கோப்பையில் ஊற்றி
வைக்கப்பட்டிருக்கும் தேனீரை
ஆளுக்கு ஒரு மிடறு
பருகுவதற்காயிருக்கலாம்

கை குழந்தை போல
காதுக்கு மேலே
எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும்
முதல் நரைக்காகவும் இருக்கலாம்

ஒரு வெள்ளை காகித கப்பல் போல
அந்தி வானில் பறந்து கொண்டிருந்த
வெண் நாரையை வெகுநேரம்
பார்த்ததற்க்காகவும் இருக்கலாம்

அல்லது
மொட்டை மாடியில்
நடை பயிற்சியின் போது
எதுவுமே பேசாமல்
நீ என் விரல்களைப்
பிடித்துக் கொண்டு
சுற்றி வந்ததற்காகவும்
இருக்கலாம்

3 Comments on “தங்கேஸ்/அழுவது ஏனென்று தெரியாது…”

Comments are closed.