
தயவில்யோ தேவனே உனக்கு.?
வயநாட்டிலே என்னஉன் கணக்கு?
தாய் உறங்க அவள்மடியில் மகனுறங்க..
தயவின்றியே தலையில் இடி இறங்க..
வாய்திறக்கவும் வழியின்றி மலையிறங்க..
மலையிறங்க கூடவே மழையிறங்க…
மண்ணெல்லாம் உடல் புதைய..
நிலமெல்லாம் சரிய..
கண்ணில்லையோ தேவனே உனக்கு?
கருணை என்ற பெயரெதற்கு உனக்கு?
கடவுளின் தேசமே..
கண்ணீரின் தேசமாச்சே!
தண்ணீரில் மிதக்கும்
தருணமே நரகமாச்சே!
அழகான மலைகளும்
கொலைகளமாகியாச்சே
வளைந்தோடும் நதிகள்
வழிமாறி ஓடலாச்சே..
இது என்ன கேரளமா இறைவா..
இக்கோலம் எதற்கடா பகர்வாய்!
