விஞ்ஞானி)/மண்

கண்ணில் விழுந்த மண்
துகளின் உறுத்தல்
தாங்க முடியவில்லை

வீட்டு மருத்துவம்
பலன் தரவில்லை
மருத்துவரை நாட வேண்டியதாயிற்று

கணிசமான வலிக்கும்
செலவுக்கும் பின்னரே
மண்ணில்லா கண்ணுடன்
வீடு திரும்ப முடிந்தது

ஆண்டவன் தன்னை
மட்டும் ஏனிப்படி
படுத்தி வைக்கிறான்
துக்குணி மண்ணால்
எவ்வளவு அவஸ்தை எனும் புலம்பல்களுக்கிடையே

தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது

கேரளத்தில் பேரிடர்
கனமழையால் மண் சரிவு
மணலில் புதைந்த உயிர்கள்
நூற்றுக்கணக்கானோர் பலி.
கடவுளின் தேசம் கண்ணீரில்
என்று.