
என்னுயிர் மண்ணே, உனக்கு ஏன் இந்த கோபம்?
வயனாட்டின் வாழ்வையே புரட்டி
அடித்து எதை சாதித்தாய்?
வீடும் வாசலும் சரிந்து
விடும் கண்ணீர் மட்டும் எதிலும் எங்கும்.
கேரளத்தின் அழகில் மயங்காதவர் இல்லை.அதே
அழகில் மறைந்து இருந்து கொல்லும்
வேகத்தை என்னவென்று சொல்ல?
எங்கு நோக்கினும்
ஏலக்காயும், காபி தோட்டங்களும், தேயிலையும்
இன்று அழிந்து போயினவே.
ஒரு கிராமமே காணாமல் போய்
நெஞ்சைத் துளைத்து கசக்கி பிழிய
வயநாடு மயான பூமியாக தெரிகிற து
மண்ணடியில் புதைந்தவர்கள் எண்ணிலடங்கா.
கண் எதிரில் நீரில், சேற்றில்,
மூழ்கி காணாமல் போனவர்கள் எத்தனை எத்தனை?
பசியும் பட்டினியும்
பிணியும் அவலமும்
மக்கள் துயரமும் கண்டும்
தாயே! உன் கொந்தளிப்பு அடங்கவில்லையா?
போதும் அம்மா போதும், மழை
நீர் பெருக்கு எடுத்ததும்,
நிலம் சரிந்ததும் , ஊர் அழிந்ததும் ,
கண்ணீர் ஆறாக பெருகியதும் .
உன் கோரத் தாண்டவத்தை நிறுத்தி விடு.
வயநாடு வளநாடு ஆக வாழவிடு.
audio of my poem
