
அருகில் யாரும் இசைக்கவில்லை
எனினும் தவழ்ந்த வண்ணமுள்ளது
ஓலிக் கோர்வையின் லயம்
நீர் பாய்ந்தோடும் சில்லிடுதலாக
குளிர்மையில் அலர்ந்து
நிலைக்கும் அறை
அதரங்களுக்கிடையில் ஒற்றைக் கோடாய்
இடைவெளி
பொம்மையின் அமர்வு போலும்
மெய்யுறையும் காலை
வெளிச்சத்தில் மிந்தலையும்
கைப்பிடியளவு மணல்வண்ண பறவை
நிழல்திட்டில் வந்திறங்குகையில்
உடல்மீது குவியும் சிறகுகள்
பாவும் சிறுகால்கள் என
எவ்வேளையிலும் இசை பிடிபடும்.
