கே.ஜி. இராதா மணாளன்/திராவிட இயக்க வரலாறு

நெடுங் காலத்து இயக்கங்கள்

இந்த நாட்டின் சொந்தக்காரர்களான திராவிடர்களின் நலங் களையும் உரிமைகளையும் போற்றிப் பாதுகாக்க, நெடுங் காலத் துக்கு முன்னரே, சில சில இயக்கங்கள் தோன்றி மறைந்துள்ளன.
1916 ஆம் ஆண்டு நீதிக் கட்சி என்னும் தென்னிந்திய நல வுரிமைச் சங்கம் மலர்ந்தது. அச் சங்கம் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து அரசியல் கட்சியாகி 1925 இல் சுயமரியாதை இயக்கமாகவும் 1937 இல் இந்தி எதிர்ப்பு இயக்கமாகவும்- தமிழ் மறுமலர்ச்சி இயக்க மாகவும், நாட்டில் பரவிப் பயனளித்தது.
திராவிட இயக்கங்களின் தோற்றங்கள்- அவற்றின் குறிக் கோள்கள், கோட்பாடுகள்- அவற்றால் திராவிடர்களுக்கு ஏற்பட்ட பலன்கள் ஆகியவற்றை-இளைய தலைமுறையினர் தெளிவாகவும் திட்டமாகவும் அறிந்து கொள்ள, இந்நூல் பெரிதும் உதவும்.

திராவிடத்தில் வெள்ளிமுளைத்தது!

வண்ணமலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்காவாக, தமிழகம் திகழ்ந்ததாக ஏடுகளில் படிக்கிறோம். காவியங்களில் காண் கிறோம்! இனிய இசையாக ஒலிப்பதைக் காது குளிரக் கேட்
கிறோம்!
சேர சோழ பாண்டிய மன்னர்களின் அருமை பெருமைகளை -வடபுலத்து வேந்தர்களை மண்டியிடச் செய்த வீரதீரச் செயல்களை எல்லாம் ஏடுகள் பேசுகின்றன. கலிங்கத்தையும் கடாரத்தை யும் வென்றவர்கள் அல்லவா நாம் என்று பூரித்து நிற்கிறோம்.
விண்முட்டும் புகழோடு வாழ்ந்த இனம், ஆரியர்களின் சதியால், சூழ்ச்சியால் வஞ்சகத்தால்- வீழ்ச்சியுற்றது.
பகைவர்களைக் களப் பலியிட்டான் தமிழன். ஆனால் நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு, கோழையாக நாணிக் கோணி நின்ற ஆரியனை, அவன் பகைவனாக திருக்க முடியும்?
அன்பு காட்டினான். ஆதரவு தந்தான். அந்நிய நாட்டான் என்று வேறுபாடு பாராதவனை, இருக்க இடம் தந்த தமிழனை ஆரியன்
எடை போட்டான்.
“மதயானையை அடக்கிப் பழக்கக்கூடிய மாவீரன் தான் இவன்! இந்த வீராதி வீரனை, ஆரியம் எனும் அங்குசத்தால் குத்தி அடக்கி வீழ்த்தி, அடிபணிந்து கிடக்கச் செய்கிறேன் பார்!” என்று மனதிற்குள் திட்டமிட்டான்.
சர்வமும் சர்வேஸ்வரன் செயல் என்றான்- சனாதன நெறி எமது என்றான். நூறு கோடி வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்தி நாலு கலைக்யானம் எம்முடையவை என்றான்.
தமிழன் கேட்டுக் கொண்டான்.
வேதங்களைப் பற்றிக் கூறிப் பேதங்களை வளர்த்தான். வருணாச்சிரமம் என்று கூறிச் சாதிகளை முளைவிடச் செய்தான். எல்லாச் சாதிக்கும் நான் மேல் சாதி-உயர்ந்த சாதி என்றான்.
தமிழன் உள்ளத்தில் இருள் சூழ்ந்து வந்ததால், மௌனமாக இருந்தான். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று ஆரியன் மேலே மேலே உயர்ந்து போனான். தமிழன் கீழே கீழே சரிந்து விழுந்தான்.
சாதாரணக் குடிமகன் மட்டுமல்ல, சர்வ வல்லமை கொண்ட மன்னர்களின் நிலையும் அதுவாகவே இருந்தது. அன்றைய மன்னர்கள் கொஞ்சம் தெளிவோடு இருந்திருந்தால், நம் இனத்துக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.
அண்டிப் பிழைத்த ஆரியனுக்கு நம் வேந்தர்கள் அதிகாரங்களை யும், சதுர்வேதி மங்கலங்களையும் உருவாக்கித் தந்தார்கள். சிம்மாசனத்துக்குப் பக்கத்து ஆசனத்தில், ஆரிய குருவை அமர
வைத்தார்கள்.
இப்படி ஆரியர்கள் சமுதாயத்தில் மேட்டுக்குடி மக்களாக ஆதிக்கம் பெற்றார்கள். பல தலைமுறைகளாக இந்த இழிநிலை
அப்படியே நிலைத்தது, நீடித்தது. காலச் சக்கரம் சுழன்றது.
வெள்ளையன் இங்கிலாந்து நாட்டுக் கொடி கட்டி. ஆண்ட இருபதாம் நூற்றாண்டின் துவக்கம்…
மிலேச்ச மொழி என்று ஆங்கிலேயன் மொழியை, ஆரியன் இழித்தும் பழித்தும் பேசினான். வெளிக்குத்தான் அந்தப் பேச்சு. உள்ளுக்குள் ஆங்கிலத்தை ஆர்வத்தோடு படித்தான்.
ஆங்கில ஆட்சியில் ஆரியப்பார்ப்பனர்கள், அரசாங்கப் பணிகளில் எல்லாம் நுழைந்து விட்டார்கள். பெரிய பெரிய பதவிகளில் அவர்கள் உட்கார்ந்து கொண்டு, அவர்களுக்குக் கீழ் பணியாற்றிய பார்ப்பனரல்லாதவர்களைத் தலை தூக்க விடாமல் தட்டிக் கொண்டிருந்தார்கள்.
பார்ப்பன அதிகாரிகளின் கெடு பிடிக்கு ஆளான பார்ப்பனரல் லாத அலுவலர்கள் மெல்லச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.
சென்னையில் வருவாய்த்துறை ஊழியர்கள் சிலரும், பிற துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் ஓர் இடத்தில் கூடினார்கள். தங்கள் நலனுக்கும், பாதுகாப்புக்கும் என்ன செய்யலாம் என்று கலந்து பேசினார்கள்.
அவர்கள் 1912 ஆம் ஆண்டு “சென்னை ஐக்கிய சங்கம்” (The Madras United League) என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். இருளை அகற்ற வெள்ளி முளைத்தது! இந்த அமைப்பின் தொடர் வளர்ச்சியாகத்தான் நீதிக்கட்சி மலர்ந்தது.
சென்னை ஐக்கிய சங்கம் உருவாவதற்கு முன்பே, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புப் பணிகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருந்தன.
1895ஆம் ஆண்டில் “பார்ப்பனரால்லாதார் இனங்களும், இந்தியப் பொதுப்பணியும்” என்ற தலைப்பிலும், “பார்ப்பன ரல்லாத இனங்கள் தெளிவு பெறுவதற்கான வழிவகைகள்” என்ற தலைப்பிலும், இரு துண்டு வெளியீடுகள் வெளிவந்தன.
பிரிட்டிஷ் ஆட்சியில் எத்தகைய ஆதிக்க நிலையில் பார்ப்ப னர்கள் இருந்தார்கள் என்பதை விவரித்திட்ட அவ்வெளியீடுகளில் பார்ப்பனரல்லாதார் கண்ணீர் வடிக்கப்பட்டிருந்தது. ‘மலையாளி’ என்ற பெயரில் 1913இல் மலையாளச் செய்தித் தாள் ஒன்று வெளிவந்தது. பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட, பார்ப்பனரல்லாதவர்கள் ஒன்று பட வேண்டிய அவசியத்தை அப்பத்திரிகை வலியுறுத்தி எழுதிவந்தது.
“மதராஸ் மெயில்” என்ற ஆங்கில நாள் ஏட்டில், பார்ப்பனர் களின் ஆதிக்கத்தைக் கண்டித்துப் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படும் விதத்தில், பார்ப்பனரல்லாத தலைவர்கள்
சிலர் அவ்வவ்போது கட்டுரைகள் எழுதிவந்தனர்.
பார்ப்பனரல்லாதாரின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னை நகரத்தில் வாழ்ந்து வந்த பி.சுப்பிரமணியம், எம். புருஷோத்தமநாயுடு என்ற இரு வழக்கறிஞர்கள், “சென்னைப் பார்ப்பனல்லாதார் சங்கம், என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார்கள். அதற்குப் பெருத்த எதிர்ப்பும் தோன்றியது. அவ்விருவருக்கும் போதிய செல்வாக்கும், பொருட்பலமும் இல்லாததால், அச்சங்கம் சிறிது காலத்தில் செயலற்றுப் போயிற்று.