அழகியசிங்கர்/எங்கே எங்கே

மினி கதை 3

ஒரு சில தினங்களாக அவர்களுக்குள் சண்டை. எளிதாக திருமாவென்று தெரியவில்லை. 
ஒருநாள் கோபத்தில் அவள் கன்னத்தில் பளீரென்று  அறைந்து விட்டான். 
இத்தனைக்கும் அன்று நடந்தது அற்பமான
 விஷயம்தான். அவன் குடித்த காப்பி தம்ளரை  அவள் கொண்டு தொட்டியில் போடவில்லை  என்ற காரணம்தான்.
அவள் ஒரு வார்த்தை சொன்னாள். “ஏன் தொட்டியில் நீ போடக்கூடாது ” என்று.
அவன் கன்னத்தில் அறைந்தது வலித்தது. அவள் கோபித்துக் கொண்டு சூட் கேஸில்
 துணிமணிகளை எடுத்துக்கொண்டு, வெளியே நடையைக் கட்டினாள். 
எங்கே செல்வாள்? அம்மா வீட்டுக்கித்தானே
 போவாள் என்று நினைத்தான்.  சமாதானம் செய்யாமல் ஆத்திரத்துடன் பேசாமலிருந்து
 விட்டான்.ரொம்ப  நேரம் வீட்டிற்கு வரவில்லை என்பதால் அவள் அம்மா வீட்டிற்கு அவன் போன்
 செய்து கேட்டான். 
ஆனால் அவள் அம்மா வீட்டிற்குப் போகவில்லை.