T.S.ELIOT ‘ S poem PRELUDE(முன்னுரை)

மொழி பெயர்ப்பு – தங்கேஸ்

அழுக்கடைந்த தெருக்களெங்கும்
சேறு படிந்த பாதச்சுவடுகள்
காபிக்கடைகளில் போய் முடிகின்றன
அங்கிருந்து கிளம்பி வரும்
மயக்கமூட்டும் மது நெடியின் வழியே
காலைப்பொழுது புலர்கிறது எனக்கு
அலங்கரிக்கப்பட்ட அலுவலகஅறைகளுக்குள்
அபத்தமான நிழல்களென உயரும்
ஆயிரமாயிரம் கரங்களில்
அபிநயிக்கிறது காலத்தின் மீது ஏற்றப்படும் நடிப்பு

One Comment on “T.S.ELIOT ‘ S poem PRELUDE(முன்னுரை)”

Comments are closed.