க. நா. சு வுடன் ஒரு உரையாடல் /தமிழவன்

படிகள் இதழ் 19வது இதழில் 1984ல் வெளிவந்த பேட்டி.

க. நா. சு. வுடன் ஒரு உரையாடல் படிகள் குழுவினருடன், பெங்களூர் வந்த க. நா சு. நடத்திய உரையாடல் இவ்விதழில் தொடங்குகிறது இலக்கிய தத்துவப் பகுதிக்கு கவனம் அதிகம் செலுத்தி உரையாடலை பதிப்பு’ செய்துள்ளோம். நீண்ட இவ்வுரையாடலை டேப்பிலிருந்து பதிவு செய்தவர் திருமதி லின்டா.

தமிழவன் : மணிக்கொடி கால எழுத்தாளர்கள், படைப்பாளிகள் தங்கள் தங்கள் சியத்தை இன்னொருவருக்குச் சொன்ன தங்களுக்குள்ளேயே வைத்துக்
கொண்டனர் என்று சொன்னீர்கள். வேண்டுமென்றே அப்படிச் சொல்லவில்லையா? இல்லையென்றால் படைப்பாளி தனது இரகசியத்தை இன்னொருவனுக்குச் சொல்ல முடியாது; அது ஒரு inner experience mysti- cal- ஆனது. என்பதாலா?

க. நா. சு : எந்த community-யிலுமே, எந்தப் படைப்பாளியுமே ஓரளவு இரகசியம் கொண்டுதான் உள்ளான். சில சமயம் படைப்பின் இரகசியம் நமக்குத் தெரிவதிலலை. சில சமயம் தெரிகிறது. பாதி தெரிகிற மாதிரி இருக்கிறபோது மற்றதை யூகம் செய்கிறோம். படைப்பு conscious-ஆனது என்று நினைக்கிறவர்கள், படைப்பில் ஏதும் ரகசியம் இல்லை என்று எண்ணி அதைப் பற்றிப் பேசுகிறார்கள். படைப்பு unconscious ஆனது என்று கருதுகிறவர்கள் அதைப் பற்நிப்பேசுவதில்லை. ந. பிச்சமூர்த்தி, புதுமைப் பித்தன் போன்றவர்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் புதுமைப்பித்தன் was never at all conscious of his writing. அவர் ஏதோ ம ன தில் வந்தது; எழுதினேன்’, என்று தான் சொல்வார். எழுத்து ஒரு conscious process. இந்த மாதிரி எழுதப் போகிறோம், நமக்கு என்று ஒரு பார்வை இருக்கிறது, அந்தப் பார்வை இந்த அளவில் நம் கதைகளில் வரவேண்டும் என்று நினைத்து அவர் எழுதினதாக எனக்குத் தோன்றவில்லை.

தமிழவன் ; இந்த இரண்டு வகை எழுத்தாளர்களில் உங்கள் பார்வை எது?

க.நா.சு : இதில் art, conscious- ஆனது என்ற கட்சியில் நம்பிக்கை உள்ளவன் நான், ஆனால் படைப்புப் போக்கை முழுக்கவும் புரிந்து கொள்ள முடியாது என் பதுவும் என் கொள்கை. சமஸ்கிருத இலக் கிய விமர்சன மரபில், படைப்பு இரகசி யத்தை விசாரிக்கக் கூடாது என்ற எண்ணம் உண்டு. Poetry நமக்கு வந்து விட்டது, அதை வாசிப்பவன அல்லது கேட்கிறவன் எப்படி வாங்குகிறான் என்பது முக்கியமே தவிர, எப்படிக் கவிதை தோனறியது என்று கேள்வி கேட்கக் கூடாது என்பது அவர்கள் மரபு. அதாவது, அது ரிஷிமூலம், நதிமூலம் மாதிரி இரகசியமாய் வைத்துக் கொள்ளக் கூடியது என்று நினைத்தார்கள்.

தமிழவன் ; நீங்கள் இரண்டையுமே….


க.நா.சு : எனக்கு நவீன விளக்கங்களில் நம்பிக்கை இருப்பதால் படைப்பில் சம்பந்தப்பட்ட psychological process, social conditioning, நமது நம்பிக்கைகள், நம் பக்கத்து வீட்டுககாரன், பக்கத்து வீட் டுக்காரி – எல்லாவற்றையும் தான் சேர்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.. ஆக, ஓரளவு conscious-ஆக think பண்ண முடியும். படைப்புப் பற்றி என்பது உண்மை. ஆனால் முழுக்க conscious ஆகச் சிந்திக்க முடியாது.

தமிழவன் : ஏதோ ஒரு பத்திரிகையில் நீங்கள், முன்பு. பிராய்டின் Interputation of Dreams-ஐப் பிரமிப்போடு படித்தாகச் சொல்லியுள்ளீர்கள். அந்த மாதிரிப் புத்த கத்தை எல்லாம் படித்ததால் கலை ஓரளவு conscious-ஆனது என்று முடிவுக்கு வந்தீர்களா?

க.நா.சு ஓரளவுக்கு அந்த மாதிரி சொல்லலாம். ஆனால் இப்போது பிராய்டின் நூல் படித்த காலத்தைத் தாண்டி வந்து விட்டேன். psychoanalysis போன்ற எல் லாமே ஓரளவுக்கு உண்மை; ஓரளவுக்கு பொய். அதாவது சமூகத்தில் நாம் நம்புகிற Politics போன்ற பல விஷயங்களைப் போல ‘பாதிப் பொய்; பாதி உண்மை’ என்கிற நினைப்பு எனக்குண்டு. பிராய்டின் நூல்கள், யு ங்கினுடைய ஆதிவாசி சமூகம் பற்றிய சிந் தனைகள், Myth-இற்கும் உண்மைக்கும உள்ள சம்மந்தம் போன்றவை பற்றி எல் லாம் படித்தபோது படைப்புப் போக்கைப் புரிந்து கொள்ள முடியுமென்று நினைத்த துண்டு.

தமிழவன் நீங்கள் இந்த இரண்டு விஷ யங்களையும் வலியுறுத்துகிறீர்கள். இந்த உங்கள் பார்வை மூலம் அசுரகணம் நாவலை விளக்கிச் சொல்ல முடியுமா?

க. நா. சு: சொல்கிறேன். ஒரு முறை மௌனி வீட்டில், அப்போது தான் சணவனை இழந்த ஒரு பெண்மணியைச் சந்தித்தேன். என்னை அறிமுகப் படுத்தியவுடன் அப்பெண் மணி What is love? Do you believe in love?’ என்று என்னிடம் கேட்டாள். The image of that woman was haunting me. கிறது. ரவிவர்மாவின் மோகினிப் படம், ஒரு மத் திய வயது வயது பெண்ணைத்தான் படம் பிடிக்கிறது. அந்தப் பெண்மணியும் அதுபோல் இருந்தார். அந்த நாவல் இந்த என் அனுபவத்திலிருந்து தோன்றியது. ஆங்கிலத்தில் மாமியார் பற்றிய ஜோக்குகள் பல உண்டு. இந்த மாதிரி ஜோக்குகள் அந்நாவலுக்கு இன்னொன்று, என் இன்னொரு பின்னணி. சொந்தப் பழக்கம். யாருக்காவது கடிதம் எழுதி அவர்களுக்கு அனுப்பாமல் எங்காவது வைத்துவிடுவேன், அவர்களிடமிருந்து பதில் வரவில்லையே என்று பின் நினைத்துக் கொண் டிருப்பது என் பழக்கம். நாதஸ்வரம் கேட் டால் எல்லோருக்கும் கல்யாணம் ஞாபகத்திற்கு வரும். சாவு ஞாபகத்திற்கு வருவது பற்றி இந்த நாவலில் எழுதினேன். ராமன் என்று பேர் வைத்தால் சூர்ப்பநகை ஒரு parallelism
இந்த மாதிரி இவற்றை எல்லாம் சேர்த்து எழுதினேன்.

தமிழவன் : English நாவல்களின் பாதிப்பு இந்நாவலில் உண்டா?

க.நா.சு: அசுரகணத்தில் foreign impact மிகவும் குறைச்சல். இந்திய மரபிலுள்ள சூர்ப்பநகை, ராமன் போன்ற popular myth-இன் பாதிப்பு அதிகம்.

தமிழவன் : வாழ்க்கை எப்படி படைப் பில் வருகிறது என்பது பற்றி உங்களுக்கு ஒரு பார்வை இருக்கிறது. அதாவது, புதுக் கவிதை த என்றால் சிக்கும் சிடுக்குமாக வாழ்க்கையின் complexities வெளிப்பட வேண்டும் என்கிறீர்கள். அதுபோல் குருதிப்புனல் பற்றி சொல்கிறபோது சமுக உண்மையைத் தீவிரமாக அந்த நாவல் சொல்லவில்லை என்கிறீர்கள். ஜே.ஜே. குறிப்புக்கள் என்றால் அதில் சொல்லப்பட்ட விஷயத்திற்கும் நடைக்கும் பொருந்திப் போகாத தன்மை இருக்கிறது என்கிறீர்கள். இப்படி மொத்த மாகப் பார்க்கிறபோது நீங்கள் உள்ளடக்கத்தை வலியுறுத்தியே சொல்லி வருகி றீர்கள். சரிதானே.

க.நா.சு: சரிதான். எனக்கு உருவத்தை விட விஷயம் தான் ரொம்பவும முக்கியம். ஆனால் இலக்கியம் ஆவதற்கு உருவம் முக்கி யம். உருவம் இல்லாமல் இலக்கியம் இல்லை ஆனால் விஷயம் கொஞ்சம் அதிக முக்கியத் துவம் கொண்டது.

One Comment on “க. நா. சு வுடன் ஒரு உரையாடல் /தமிழவன்”

Comments are closed.