வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்

(துப்பறியும் நாவல், பாகம் 1)

1-வது அதிகாரம்


பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்”பிராணநாதா! நான் எத்தனை நாட்களாகச் சொல்கிறேன். அதை அடியோடு மறந்து, மதியாது அலக்ஷ்யம் செய்கின்றீர்களே! பாழுங் குடியும்,வேசியும் ஒரு ஆளைக் கொள்ளும் யமனல்லவா! நமது குடும்பம் முன்னர் பெரியார் நாளில் எவ்வித செழுமையாக இருந்தது? இப்போது எந்த கதியை அடைந்திருக்கின்றது? இந்த சாப்பாட்டுச் சமயத்தை விட்டால் தங்களைப் பார்ப்பதற்கே அரிதாக இருக்கின்றதே ! இவ்விதம் இருந்தால் நான்கு குழந்தைகளும் நானும் எக்கதியாவது? இந்த துர்ப்பழக்கத்தை ஒழியுங்கள்; இனி வேண்டாம். இந்த புட்டியை நான் கட்டாயம் உடைத்தே தீருவேன்” என்று கூறிச் சாராயப் புட்டியைக் கணவனின் கைவிலிருந்து கோமதி என்ற மின்னாள் பிடுங்க முயன்றாள்.

அட்டகாஸமாக வாய்ப் பேச்சைக் கொட்டி, சட்டதிட்டமாக அளந்து விட்டு சமயம் கிட்டி முட்டி வருங் காலையில் கிட்ட செருங்காமல் கை விட்டு எட்டிச் சென்று வேடிக்கை பார்க்கும் மட்டு மரியாதை யற்ற கட்டைகளும் சிலர் உண்டு.

புட்டி புட்டியாகக் குடியைத் தள்ளும் குண்டோதானின் முன்பு சாமானிய எளிய பேதையின் பலம் சாயுமா! அவன் அவளை இழுத்துத் தாறுமாறாகத் தள்ளி உதைத்து “திமிர் பிடித்த நாயே ! எனக்கு புத்தி சொல்ல வேண்டாம் என்று நான் எத்தனை தரம் சொல்வது. இன்னும் இந்த அகம்பாவத்துடன் இருக்கிறாயா! இனி இப்படிப் பேசாதே. என் இஷ்டம். என் மனம் விரும்புகிற விதந்தான் நான்இருப்பேன், சீ விலகு” என்று தள்ளிவிட்டு, புட்டியிலிலிருந்த சாராயத்தைப் பொட்டு விடாது குடித்து விட்டுத் தாசி லோகாம்பாளின் வீட்டிற்கு ஓடினான்.
கோமதி என்ற மடந்தைக்கு வயது 18 இன்னும் பூர்த்தியாக வில்லை. இதற்குள் 4 குழந்தைகள். அவள் தனது 13-வது வயதிலிருந்து குழந்தைகளைப் பெறும் யந்திரமாயும், வீட்டு வேலை செய்யும் எந்திரமாயும் குடிகாரனிடம் சிக்கிக்கொண்டாள். கேவலம் சிறிய வயது முதல் குழந்தைகளைப் பெற்றுக் குடிகாரனின் உதைகளுக்கும், வெறி கொண்ட செய்கைகளுக்கும், வீட்டு வேலைகளுக்கும் இலக்காகியதால் மிக்க மெலிவடைந்து தேக புஷ்டியும், ரத்த வலிவும் குறைந்து கேவலம் க்ஷீண திசைக்கு அவள் வந்து விட்டாள். அவள் தன்னாலான வரையில் அவன் குடிப்பதையும், தாசி வீடு போவதையும் எத்தனை தடுத்தும் அந்தப் படுபாவி அதை சட்டை செய்யாது தன் வேலையிலேயே கண்ணுக் கருத்துமானான்.

“எனக்கு என்ன குறைவு? என் சினேகிதனே எனக்கு விவாகத்தை முடித்து வைப்பதாகச் சொல்லி விட்டான்” என்று தைரியமாகப் பெண் பேசியாகிய பிறகு சினேகிதனிடம் தெரிவித்தால், “நான் சொல்லியது உண்மைதான். இச் சமயம் எனக்கு இவ்வித செலவு வந்து விட்டது. என்ன செய்வேன்?


அவன் தச்ச வேலை செய்து, தினம் கிடைக்கும் கூலியில் பெரும் பாகம் தன்னிரு செலவுகளுக்கும் போக எஞ்சிய சிறு அணாத் தொகையைக் குடும்பத்திற்குக் கொடுத்து வந்தான். அந்த சிறு தொகை குடும்பத்திற்குப் போதாமல் அனேக நாள் பட்டினி கிடக்க நேரும். குடிகாரன் தான் பணங் கொடுக்காத குற்றத்தை மறந்து “சாப்பாடு வயனமாக நான்குவகை ஏன் செய்யவில்லை?” என்று மனைவியை உதைப்பது வழக்கம். இவ்விதமே வெகு நாட்களாகத் தொந்தரவு செய்து கொண்டிருந்தான்; நாளா விருத்தியில் சிறு தொகை கொடுப்பதையும் நிறுத்தி விட்டான். பின்னும் சில மாதத்தில் சாப்பிட வருவதையும் நிறுத்தி விட்டான்.
நான்கு குழந்தைகளுடன் ஒரு பேதை என்ன செய்வாள் பாவம்! இரண்டு வீடுகளில் வேலை செய்ய ஆரம்பித்தாள். அதோடு ஆபீஸ்களுக்கு நான்கு பேருக்குச் சாப்பாடு எடுத்துச் செல்வதை ஏற்பாடு செய்து கொண்டாள். தினம் காலை வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, பகல் 10 மணிக்கு நான்கு வீட்டிற்கும் சென்று சாப்பாடுகளை வாங்கி வருவதற்குள் பதினோரு மணியாகிவிடும். ஒவ்வொரு மூலையில் ஒவ்வொரு வீடு, அதுபோலவே ஆபிஸும் ஒவ்வொரு இடமாக அவள் துரதிருஷ்டத்தினால் அமைந்தது.

ஒவ்வொருவரும் சாப்பிட்டு மிகுந்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டுவந்து குழந்தைகளுக்குப் போட்டுக் கணக்கு மிஞ்சினால் புசிப்பது; இல்லையேல் பட்டினி கிடப்பது. இவ்விதமாகவே தன் காலத்தைக் கடத்தனாள். வெயிலின் கொடுமையினால் அவள் கடந்து செல்வதற்குச் சற்று நேரமாகி விட்டால் அவளை அதட்டி வைது தடபுடல் படுத்துவார்கள் சாப்பாட்டு ராமன்கள்.
இவள் வேலை செய்யும் வீடுகளில் ஐந்து ரூபாய் கிடைக்கின்றது. நான்கு எடுப்புக் காப்பாட்டில் ஐந்துரூபாய், ஆக பத்து ரூபாய் கிடைப்பதில்,வீடு குடிக்கூலி மூன்று ரூபாய் போய் விட்டால் 7 ரூபாயும், எடுப்புச் சாப்பாட்டில் மிகுந்த சாப்பாடும், பத்து தேய்ப்பதில் மிகுந்த சாப்பாடுங் கொண்டு நான்கு குழந்தைகளும் அவளும் ஆக ஐந்து பேர்கள் ஒரு மாதம் பூராவும் புசிந்து வாழுவதென்றால் இந்த பட்டினத்தின் சாத்யமானதா என்பதை யோசித்துப் பாருங்கள். இவ்விதமாக எத்தனை ஏழைப் பெண்கள் வருந்துவதை நாம் கண்ணால் காண்கிறோம். இந்த ஏழ்மை நிலை என்றுதான் நமது பாரத நாட்டை விட்டு ஒழியுமோ? என்றுதான் பாரத மாதா வின் அருள் பிறக்குமோ ?……….இப்படியே சில வருடங்கள் வேலை செய்து வந்தாள். மூத்த பையனுக்கு 10 வயதாயிற்று. அப் பையனை ஏதேனும் வேலை செய்யும்படியாகக் கோமதி எத்தனை கூறியும் அந்த சோதாப் பபல் தகப்பனுக்கு இரண்டாவதாக ஆய் விட்டதால் பிடிவாதம் செய்துத் தாயை இம்சித்தான். தாயார் மனம் நொந்து கடிந்து திட்டினால் எங்கேனும் ஒடி விடுவது; சாப்பாட்டிற்கு வராது அழ வைப்பது. பிறகு கோமதி கண்ணீர் பெருகத் தேடியலைந்து இழுத்துக் கொண்டு வந்து பெத்த மனம் பித்து என்பது போல உணவிட்டு உபசரிப்பது. அந்தப் பையனை நல்ல வார்த்தை சொல்லி சித்தாள் வேலைக்கு அனுப்பினாள்.

“வரம்பு கடந்து பேசினால் பல்லை உடைத்து விடுவேன்” என்கிறான் ஒருவன். அவனை வரம்பு கடக்கும்படியான ஆத்திரத்தைத் தானே உண்டாக்கி விட்டதை அவன் மனம் நினைப்பதே இல்லை.பகல் பட படக்கும் வெயிலில் சென்னையிலுள்ள தார் ரோட்டில் தலையில் பெரிய பாரத்துடன் நடப்பதென்றால் அந்தோ! பரி தாபம்! பரிதாபம்! அந்தக் கண்ராவியை அனுபவித்தால் தான், கண்ணால் கண்டால் தான் தெரியும், வயிற்றுக் கில்லாக் கொடுமை யினாலும், நான்கு குழந்தைகளின் போஷணைக்காகவும் கோமதி அத்தகைய கொடிய வெயிலில் நடந்து, கால்கள் கொப்புளிக்கச் சாப்பாட்டை எடுத்துச் செல்லலானாள்.

“நீ எப்படியாவது விவாகத்தைச் செய்து கொள். பிறகு உனக்கு நான் உதவி செய்கிறேன்.” என்று கூசாது சொல்லிவிட, நம்பிய மனிதன் அந்த மனிதன் வார்த்தையினால் வெம்பிப் போய் விக்னேச்வார் விவாகம் செய்து கொண்டது போலச் சந்தியில் நிற்க நேருகின்றது.


சித்தாள் வேலைக்குக் கிடைக்கும் ஆறு அணாக் கூலியை அவன் கண்டபடி ஏதேனும் வாங்கித் தின்று விடவும்,சரியாகக் கொண்டு தாயிடம் கொடாமல் சண்டித்தனம் செய்யவும் தொடங்கினான். அவ்வாறு செய்யும் திருட்டுத்தனத்தை யறிந்த கோமதி நேரே மேஸ்த்ரியிடம் சென்று “கூலியைப் பையன் கையில் கொடுக்க வேண்டாம்; என்னிடம் கொடுங்கள்” என்று கூறிவிட்டாள். இதையறிந்த பையன் தாயார் பணம் வைக்கும் இடத்தை யறிந்து திருட வாரம்பித்தான். மகனோ திருட்டுக் கொட்டு; மணவாளனோ குடிகார வேசிக் கள்வன். இத்தகைய இருவரையும் படைத்த நங்கையின் கதி எவ்விதம் தானிருக்கும்?
இரண்டாவது பையன் சற்று அடங்கியவன். அவனுக்கு 9 வயதாகிறது. அப் பயல் தரும பாடசாலையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். அதற்கடுத்தது 7 வயதுப் பெண். கையிலிருப்பதும் பெண் குழந்தை. இந்த ஏழு வயதுப் பெண் குழந்தை தாயார் வேலை செய்யப் போகையில் சின்ன குழந்தையை வைத்துக் கொண்டிருப்பது. இவ்விதமே, பின்னும் சில காலம் சென்றது. அக் குடிகாரப்பாவி என்றைக்கேனும் வீட்டுக்கு வருவது; கோமதி காலணா, தம்பிடி சேர்த்து வைத்திருந்தால் அதை சண்டையிட்டுப் பிடுங்கிக் கொண்டு போவது. இந்த வழியை மட்டும் அவன் விடாது செய்து வந்தான். கோமதியின் தேக பலம் ஏற்கெனவே குன்றி விட்டதோடு இத்தனை வேதனைகளுக் கிடையில் அதிக வேலை செய்வதும், எடுப்புச் சாதங் கொண்டு நடப்பதனால் தரின் சூடும், வெய்யிலின் வெப்பமும் ஒன்றுகூடி நாளுக்கு நாள் அவள் மிகவும் நலிந்து விட்டாள்.

வெளியூர்ப் பிரயாணம் வெகு ஜோர்தான். கண் காட்சிகள் அதி மனோ கரமே! ஊரும் நிரம்ப சுகமே! ஆனால் ஆறுமாதத்திற்குத் தன் ஊரில் செலவாகும் பணத்தை ஒரு மாத வெளியூர்ப் பிரயாணத்தில் செலவழிக்க நேர்ந்து விடுகின்றது. இதுதான் பெரிய கஷ்டம்.

இந் நிலைமையில் அவளுடைய கணவன், எத்தளை சொல்லியும் கேளாது அவளை இம்சிப்பதுடன் விடா மூர்க்கமாகவே இருந்தான். கோமதி தன் விதிப்பயனால் மீண்டும் கர்ப்பவதியாகி விட்டாள். கர்ப்ப சின்னத்தின் முதல் ஆரம்பமாகிய மசக்கை என்னும் நோய் பலமாகப் பீடித்து அவளை எழுந்து நடக்கவொட்டாது தசையோடு தள்ளிவிட்டது. அந்தோ ! ஏற்கெனவே கர்ப்பிணி; மேலும் கர்ப்பிணி என்ற வாக்கியம் உண்மையாகி விட்டதால் குழந்தைக ளெல்லாம் “பசியோ! பசியோ!” என்று கத்துகின்றன. எடுப்புச் சாப்பாடு நின்று விட்டதால் அதனால் பெறும் வருமானமே குறைந்து விட்டது. வீட்டு வாடகை ஒரு மாதத்திற்குச் சேர்ந்து விட்டது.
அபலையான கோமதி இந் நிலைமையில் என்ன செய்வாள்? தனக்கோ எழுந்து நடக்க முடியவில்லை. குழந்தைகளின் பசியையோ தீர்க்கும் மார்க்கமில்லை, கணவனோ இவளது கேவல நிலைமையைச் சற்றும் கவனியாது, இங்கு வருவாய் ஏதுமில்லை என்பதை யறிந்து வீட்டிற்கு வருவதையே அடியோடு விட்டு விட்டான்.
வீட்டு வாடகை கொடாமையினால் வீட்டுக்காரர்கள். “வாடகையை முதலில் கீழே வைத்துவிட்டு உடனே காலி செய்து விடு. இரண்டு மாத வாடகை பாக்கியாகி விட்டதால் நீ இன்னும் எப்படி பணத்தைக் கொடுப்பாய். ஆகையினால் உடனே காலி செய்துவிடு” என்று தாக்ஷண்ய மின்றிப் பேச வாரம்பித்தார்கள்.

.

அங்கு சென்று பார்க்கையில் அவ்வீட்டில் ஒரு முதலியார் குடித்தனம் செய்வதைக் கண்டு திடுக்கிட்டு அவர்களை விசாரித்ததில் தாங்கள் நேற்றுதான் குடித்தனம் வந்ததாயும், தங்களுக்கு எதுவும் தெரியாதென்றும் அவர்கள் கூறிவிட்டார்கள். இதுகேட்டு மனமுடைந்த கோமதி அவ் வீட்டிற்கு எதிரில் உள்ள சோடாக் கடைக்குச் சென்று “இத் தாசி எங்கே?” என்று விசாரிக்கையில் அக் கடைக்காரன் அவளுடைய இனத்தினர்கள் ஜாதிப் பிரஷ்டம் போட்டு விட்டதால் அவள் அவர்களின் முன்னிலையில் இருப்பதற்கு வெட்கிச் சிதம்பரத்திற்குக் குடியேறியதாகச் செய்தி தெரிந்தது” என்றான். இது கேட்ட கோமதி மிகுந்த துக்கத்தை யடைந்து “ஐயோ! இதுவும் ஒரு விதியா! என் காலக் கொடுமையே அவளை ஊரை விட்டுத் தள்ளியதோ! ஹா! கடவுளே!” என்று விசனித்த வாறு வீட்டை யடைந்தாள். அந்தோ! துர்ப்பாக்யவதியான கோமதி அவர்கள் காவில் விழுந்து “அம்மா! தாயே! எந்நிலைமையறித்தும் என்னைக் கடிந்து கொண்டால் இந்த நேரம் நான் என்ன செய்வேன்? எங்குய்வேன்? என் மீது இரக்கங் கொண்டு சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்று எத்தனை சொல்லியும், கெஞ்சியும் அவர்கள் கேளாது மிக்க கடினமாகவே கூறி விட்டதால் கோமதி மனந் தவித்தவாறு எழுந்து நடக்கவும் மாட்டாது, தள்ளாடி தடுமாறிக் கொண்டே தாசி லோகாவின் வீட்டிற்குச் சென்றாள்.

தன் ஊரில் 10 அணாவுக்கு ஒரு டஜன் வாங்கக் கூடிய பழத்தை வெளியூரில் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிப் புசிக்க நேருகின்றது. இங்கு காலணா வண்டிச் செலவிற்கு யோசிக்கிறோம். அங்கு 5 ரூபாய் வெள்ளரிப் பழத்தைப் போலக் கொடுத்து விடுகிறோம். இவ்விதமே அதிகப் பணம் கரைந்து விடுகின்றது அத் தருணம் வீட்டு வாசலில் அதிகக் கூட்டமாக இருப்பதைக் கண்டு “இங்கென்ன ஆபத்து வந்து விட்டது?” என்று எண்ணி உள்ளே சென்று பார்க்கையில் கோமதியின் பெரிய மகனை ஒரு போலீஸ் சேவகன் பிடித்துக் கொண்டு உதைக்கிறான். அவன் எதிரில் சுமார் 5 வயதுள்ள குழந்தை “இவன்தான் என் கைக் காப்பைக் கழற்றினான்.” என்று சொல்லிக் கொண்டிருந்தது. இந்த வேடிக்கையைப் பார்ப்பதற்கு நூற்றுக் கணக்கில் கூட்டம் கூடிவிட்டது. மைசூரிலுள்ள வீதிகளே ஓர் தனித்த அழகு. அரசர் வாசம் செய்யும் இடங்களின் மகிமையே அபூர்வ வசீகரம் பெற்றிலகும் போலும், கடவுளும் காவலனும் ஒன்று என்பது போல இடமும் அமைகின்றது.

கோமதியின் மனம் ஏற்கெனவே எரிந்துகொண்டிருந்ததற்கு இன்னும் எண்ணெயை ஊற்றியதுபோல இங்கு தம் மகன் திருடனென்று பிடிக்கப்பட்டு நிற்கும் கண்ராவியைக் கண்டதும் அவள் மனம் தாங்கவியலாத துக்கந்தையும், ஆத்திரத்தையும் அடைத்து பொங்கிவிட்டது. “ஐயோ கடவுளே! என்னை இவ்விதம் வைத்து ஆட்டுவதைவிட உன்னடி சேர்த்துக்கொள்ளலாகா? குடியும் வேசிப்பித்தும் பிடித்த கணவனும், திருடனும் சோம்பேறியுமாண மகனும் வேண்டுமென்று நான் எத்தனை நாள் தவம் செய்தேன்! ஐயோ! இப்பூவுலகில் என்னைப்போல எத்தனை ஏழைகள் கஞ்சிக் கில்லாது பஞ்சைகளாக வாழவில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சீராகவில்லையா! என் கதிதானா இவ்லிதம் பலவிதத்திலும் துன்பமும், துக்கமும், அவமானமும் நிறைந்திருக்கவேண்டும். ஹா! சர்வேசா! சண்டாளியின் வயிற்றின் இத்தகைய புத்திகள் பிறக்கவும், நான் இக்கோரமான காட்சியைக் கண்டு சகிக்கவும் இன்னும் உயிருடன் வாழுகின்றேனே!” என்று கண்ணிமை ஓடவிட்டுக் கதறியவாறு மூர்ச்சையானாள்.சில நிமிஷங்களில் மூர்ச்சை தெளிந்து எழுந்தாள். இதற்குள் போலீஸார் “அம்மா! உங்கள் மகன் திருடிய காப்பு இதோ அவன் மடியிலேயே அகப்பட்டுவிட்டதால் அவனைக் கைது செய்து கொண்டு போகிறோம்” என்று கூறிவிட்டுப் பையனை இழுத்துக் கொண்டுபோசு வாரம்பித்தார்கள். கேவலம் 10 வயதுதான் நிரம்பிய பையனாகையினால் அவன் மிக்க பயந்துபோய் “அம்மா! அம்மா! நான் தெரியாமல் செய்துவிட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன். அம்மா! அம்மா!” அம்மா! அம்மா!’ என்று கத்தினான். திருடன் எத்தனை கத்தினாலும் விடுபவர் உண்டா! சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார்கள். தான் எவ்வளவு சொல்லியும் கேளாமையால் ஒரு தடவை தண்டனையடைந்த பிறகாவது திருந்துவாள் என்று நினைத்து கோமதி அவனுக்குப் பதிலே பேசாது மௌனம் சாதித்து உள்ளே சென்றாள். அவளுடைய துக்கத்தின் எல்லையை அறிந்தவர் கடவுள் ஒருவர்தான்.

அலங்காாவதிகளான பெண்கள் இடையில் ஒரு குழக்கதையைத் தாங்கிச் செல்வதும், ஆண்கள் ஒரூ குழந்தையைத் தாங்கிச் செல்வதும் தனித்தனி யான அழகுடன் விளங்குகின்றது.

இந்த நிலைமையில் கோமதியைக் கண்ட வீட்டுக்காரர்கள் “நீ உடனே காலி செய்கிறாயா! உன் சட்டிப்பானையை எடுத்து வீதியில் வைக்கட்டுமா! எங்கள் வீட்டில் எத்தனையோ பண்டங்கள் இதுபரி யாதம் காணாதுபோனதை எல்லாம் உன் மகன் நான் களவாடியிருப்பான் என்று இப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது. இனி அரை விநாடியும் இவ்வீட்டில் இருப்பது கூடாது, உன்னுடைய ஓட்டை உடைல்சல்களை எடுத்துக்கொண்டு நட” என்று கண்டிப்பாய் கூறி அவளுடைய சட்டிபாளைகளை எடுத்து முற்றத்தில் போட்டார்கள்.
“அந்தோ! பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். என்பதுபோல என் கதி இவ்விதமாகவா ஆய்விட்டது?” என்று வருந்திய கோமதி அவர்களை நோக்கி “என் அன்புடையீர்! நான் இதோ சாமான்களைக் காலி செய்துவிடுகிறேன். ஆனால் இந்த நிலைமையில் நான் உங்கள் வாடகைப் பாக்கியை எவ்விதம் செலுத்துவேன். அந்தப்பணம் செலுத்துதற்கான மார்க்கம் ஒன்றுமே புலப்படவில்லையே! என் பர்த்தாவைப் பார்க்க எண்ணிச் சென்றேன். அவர் ஊரைவிட்டே சென்று விட்டனராம். என்னுடைய பரிதாபத்திற்கு இறங்கி நீங்கள் ஓர் வழி செய்யவேண்டும். என்னிடம் 5 ரூபாய் பெறுமானமுள்ள பாத்திரங்கள்கூட இல்லையே! நான் என்ன செய்வேன்?” என்று கண்ணீர் உதிரக கேட்டாள். இது கேட்ட வீட்டுக்காரி “அதோ உன்னிடம் ஒரு மரப் பெட்டி இருக்கிறதே அதையும், தண்ணீர் மொள்ளும் தவலை ஒன்று இருக்கிறதே அதையும் கொடுத்துவிட்டுச் செல்லு. மற்றவைகளை வேண்டுமானால் நான் ஐயோ பாவமென்று மன்னித்துவிடுகிறேன்.” என்று வெகு தாராளமாய்ப் பதில் கூறி அவ்விரண்டையும் எடுத்து வைத்துக்கொண்டாள். பரதேசியான கோமதி மிச்சமுள்ள கந்தல் பொந்தல்,தட்டுமுட்டு, ஓட்டை உடைசல் முதலியவற்றை எடுத்து வீதியில் வைத்துக்கொண்டு தனக்கு உபயோகமற்றதை வீசி எறிந்துவிட்டு வீட்டுக்காரர்களுக்கு நமஸ்காரம் செய்து உத்தரவு பெற்றுக்கொண்டு வீதியில் வந்தாள்.

உண்மைக் காதலுடைய கணவன் தன் மனைவியை கோக்கி ” என் கண்மணி! மூன்று தினங்களாக உன் கையினால் அன்னமிட்டுப் புசிக்காததால் என் பசியாறவே இல்லை. இன்றே என் வயிறு நிறையப் பசியாறப் புசித்தேன்” என்கிறான்.

அந்தோ! “மூன்று மக்களுடன் கர்ப்பிணியான பேதை எங்கு செல்வது என்னவிதம் இனி உய்வது?” என்ற பெரும் துக்கம் அவளது தொண்டையை அடைத்துக் கொண்டது. அச்சமயத்தில் அவளுடைய சிறிய மகன் தாயின் துயரைக் கண்டு சகியாமல் “அம்மா! வருந்தாதே! எப்போதும் ஈசன் சோதனை செய்யாது நன்மையளிக்கமாட்டார். நாம் பரதேசியாக அலைவது நரஜென்மங் கொண்டவர்களுக்குக் கண் தெரியாவிடினும் சர்வாந்தர்யாமியாகிய அச்சுதனுக்குத் தெரியவில்லையா! அவனை நம்பி நாம் இப்போதே கிளம்புவோம், வா!” என்று கூறி சட்டிப்பானைகளை எடுத்துக்கொண்டு தங்கையிடம் சிலவற்றைக் கொடுத்து எல்லோரும் நடக்கவாரம்பித் தார்கள். அப்போது சரியான உச்சி வேளையாதலால் வெய்யில் வெகு தீக்ஷண்யமாகக் காய்கின்றது. “அவ்வீட்டுக்காரர்கள் காட்டிய கடின இருதயத்திற்கு நான் தோற்கவில்லை” என்று சூரியன் போட்டியிடுவது போலிருக்கின்றது. ஆனால் இந்த அநாதைப் பரதேசிகளைக் கண்டு இரக்கங்காட்டிச் சூரியனிடம் சிபார்சு செய்யவருவதுபோல மேகங்கள் தாராளமாகத் தண்ணீரைக் குடித்துவிட்டு குளிர்ந்த முகத்துடன் சூரியனருகில் சென்று, வெப்பத்தை மறைத்துத் தணிக்க வாரம்பித்தன. இந்த நிலைமையில் எங்கு செல்வதென்று தெரியாது சிறிது தூரம் சென்றதும் கோமதிக்கு அசாத்யமான துக்கத்தினாலும்,அப்போதிய நிலைமையின் பலஹீனத்தினாலும் அதற்குமேல் நடக்கமாட்டாது கால் துவண்டு கீழே தள்ளவாரம்பித்துவிட்டது.

வினா:- அமுத மொழிக் கிள்ளையே! உனக்கு மிகப் பிரியமான பொருள் நான் கொண்டு வந்திருக்கிறேன். அது எது ?

விடை:- அன்பு நிறைந்த அரிய முத்தாஹாரம் தான் ராதா! அதற்கே அடியாள் எதிர் நோக்குவது.

இவளுடைய நிலைமையைக் கண்ட கேசவன் மிக்க மனம் வருந்தி “அம்மா! உன்னால் நடக்க முடியவில்லை என்பதை யறிகிறேன். என் மனம் தத்தளிக்கின்றது. இதோ ஓர் மரம் இருக்கின்றது. இதனடியில் சற்று உட்கார்ந்திருப்போம். உன் களை தெளிந்ததும் பிறகு நடக்கலாம்.” என்று கூறி அம்மரத்தடியில் சாமான்களை வைத்துவிட்டுத் தாயாரை உட்காரச்செய்தான். கோமதியின் தரித்திர திசையில் முதல் நாள் இரவு முற்றும் சுத்த பட்டினியாகையினாலும், அன்று காலை முதல் அலைச்சல் அதிகரித்ததனாலும் அவளுக்குத் தாங்கவியலாத களைப்பு மேலிட்டுவிட்டது. இந்நிலைமையில் மகா போக்கிரியாகிய முதல் மகன்மீது நினைவு தாவிப் பதிந்தது. இத்தகைய சோகத்தினால் அவள் மயக்கத்தி லாழ்ந்தாள். மகா உத்தம புத்திரனாகிய கேசவன் அவளுடைய நிலைமையைக் கண்டு பரிதபித்துத் தன் தங்கையை நோக்கி “பாலா! நான் வெளியில் சென்று அம்மாவுக்குச் சிறிது ஆகாரம் வாங்கிக்கொண்டு வருகிறேன். இங்கு ஜாக்கிரதையாக அம்மாவைப் பார்த்துக்கொள்” என்று கூறி, ஒர் தகரக் குவளையைக் கையில் எடுத்துக்கொண்டு சென்றான். எங்கு செல்வதென்பதை யறியாவிடினும் தாயிடத் துள்ள பாசத்தினால் விரைவில் ஓர் காபி ஒட்டலை அடைந்தான். அப்போது அகாலமாகையினால் ஓட்டலில் ஒன்றும் தயாராக இல்லை. அதைக் கண்டு வருந்திய கேசவன் அவ்வோட்டலுக்கு அடுத்திருந்த வீட்டிற்குச் சென்று “அம்மா! பரதேசி ஏழை; ஒரு கவளம் அன்னம் கொடுத்தால் மிக்க புண்ணியமுண்டு” என்று கேட்டான்.

வினா:- கண்ணே! புத்தகப் படிப்பினால் நீ என்ன விஷயம் தெரிந்து கொண்டாய்?

விடை:– நாதா! என்னுடைய ஆயுள்காலம் பரியத்தம் நான் தங்களுக்கு அடிமையாக விருந்து பெறும் பேற்றைத் தெரிந்து கொண்டேன்.

இந்த குரல் கேட்டு வெளிவந்த வீட்டுக்காரி “ஏனடா கொட்டாப்புளி தடியா! பிச்சைக்காரன் போல வந்து ஏதேனும் அகப் பட்டதைச் சுருட்டிக் கொண்டு போக நினைக்கின்றாயா! ஒடு வெளியில்” என்று அதட்டினாள். அந்தோ! சுடுச்சரம் போன்ற அவ் வார்த்தையைக் கேட்ட கேசவன் மன முருகிப்போய், “தாயே ! ‘பிச்சை இல்லை’ என்றால் நான் போய் விடுகிறேன். வீணான வார்த்தைகளைக் கூறி மனத்தை நோகச் செய்ய வேண்டாம்; போய் வருகிறேன்” என்று கூறி வெளியில் வந்தான். கேவலம் சிறிய பாலகனாக விருப்பினும் அவனுடைய மன வேதனையினால் அவன் பெரிய குடும்பஸ்தன் போலவே தவிக்கலானான்.
அவ்வீடு விட்டதும், இனி தான் எங்கு செல்வதென்று யோசித்துப் புலம்பியவாறு நடக்கையில் எதிரில் ஒரு ஸைகில் வண்டி வந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு மோட்டார் வந்து விட்டதால் கேசவன் தட்டுத் தடுமாறி மத்தியில் நின்று விட்டான் ஸைகிலில் வந்த மனிதன், திடீரென்று போட்ட பிரேக்கினால் கீழே விழுந்து விட்டான். விழுந்தவன் எழுந்து “அடேய் தடிப்பயலே. உனக்குக் கடவுள் கண் கொடுக்க வில்லையா! வீதியில் பார்த்து நடக்காமல் என் வண்டியில் மோதும்படி அஜாக்கிரதையாக நடந்து வந்து என் வண்டிக்குச் சேதம் உண்டாக்கினாயே கழுதை!” என்று கூறிக் கேசவனை இழுத்து முதுகிலும்,கன்னத்திலும் நான்கு அறைகள் விட்டு “ஓடு நாயே !” என்று கூறிவிட்டுச் சென்று விட்டான்.
அந்த மகானுபாவன் கையில் மோதிரம் போட்டுக் கொண்டிருந்தான். அம் மோதிரத்தின் கூர்மையானது உள் பக்கம் திரும்பி யிருந்ததைக் கவனிக்காது ‘பளீர் பளீர்’ என்று அடித்ததால் அது முதுகில் நன்றாகக் கீறி ரத்தம் பீறிட்டுக் கொண்டது. கேசவன் இந்த பாதையைக் கூடப் பொருட் படுத்தவில்லை. தன் தாயாரைத் தனித்துவிட்டு வந்த நினைவு அதிகமாய் மனத்தில் வேலை செய்ததால் அதையே நினைத்து “இதுவும் நம் தலைவிதி ” என்று நடக்க வாரம்பித்தான்.


வினா:- கணவன் மனைவி என்றால் என்ன அர்த்தம்?

விடை:- கனியும் ருசியும் என்றால் என்ன அர்த்தமோ அதே அர்த்தம் தான். கணவன் கனியாயும் மனைவி கனியின் ருசியாயும் இருக்கவேண்டு மென்பதே பொருள்.

ஓர் வீட்டுத் திண்ணையில் மேளம் அடிப்பதைக் கண்டு அங்கு ஓடி “ஐயா! என் தாயாருக்கு அதிக களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் ஏதேனும் ஆகாரம் வேண்டும் ” என்று செஞ்சிக் கேட்டான். சமையற்காரனே மனமிரங்கி சில பக்ஷணங்களும், காப்பியும் கொண்டு வந்து கொடுத்தான். கேசவன் பரம சந்தோஷத்துடன் அதை வாங்கிக் கொண்டு தன் தாயை நோக்கி ஓடிவந்தான்.மரத்தடியில் ஒருவரும் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டு “ஹா! அம்மா எங்கே சென்றிருப்பாள்?” என்று மிக்க விசனத்தோடு நாற்புறமும் பார்த்தான். குழந்தையையும் காணவில்லை; தாயாரையும் காணாமையினால் கேசவன் மனத்தில் பலவிதமான எண்ணங்கள் உதிக்க வாரம்பித்து விட்டன. “தாங்க வியலாத களைப்பினால் தாயார் இறந்து விட்டாளோ! இறந்த சவத்தை யாரேனும் குழந்தைகளுடன் தூக்கிக்கொண்டு போய் விட்டனரோ! அன்றி மனக்கிலேசத் தினால் அவள் தானே தற்கொலை செய்து கொண்டாளோ! ஒன்றும் தெரியவில்லையே! ஹா! அம்மா! அம்மா! பாலா! என் கண்ணே! லீலா! லீலா! எங்கு சென்று மறைந்து விட்டீர்கள் ? என் செல்வத் தங்கைகளே! என் அரிய அன்னையே!” என்று துடிதுடித்து அப்படியே புலம்பியவாறு நின்று விட்டான்.

வினா:- கணவனுக்கு மனைவி முக்கியமா! மனைவிக்குக் கணவன் முக்கியமா!

விடை :- கரும்புக்குச் சாறு முக்கியமா 1 சாறுக்குக் கரும்பு முக்கியமா! ஒன்றுக்காக மற்றொன்று அவசியம். அதே போல இருவரும் முக்கியமாகும்.

One Comment on “வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்”

Comments are closed.