அழகியசிங்கர்/கருப்பு நாய்

வாட்டச்சாட்டமாகக்
கருப்புநாய்
அப்பாலோ மருந்தகத்தில்
கட்டியிருந்தது
அசந்து விட்டேன்
அதனிடம் கேட்டேன்
போட்டோவுக்கு
போஸ் கொடு என்று
சரிசரி என்று தலை அசைத்தது
கம்பீரமான
அதன் தோற்றத்தைப்
புகைப்படம்
எடுத்துக்கொண்டேன்
சிறிது நேரத்தில்
அதன் எஜமானைப்
பார்த்தவுடன்
வாலசைத்தது

இன்று
நான் சந்தித்த
முக்கியமான
நபர்
கருப்புநாய்