சாய்ரேணு சங்கர் கவிதை

என் கால்கள் நடக்கும் பூமி நீ
எனைக் காத்து நிற்கும் சாமி நீ
பொன்னாய் வளந்தரும் நாடு நீ
புகலாம், சுகமாம் வீடு நீ

அறம்காக்கும் போர் வீரன் நீ
அகம் அடங்கிய தீரன் நீ
திறனும் அறிவும் உன்சொத்து
தேர்கல்வி ஞானம் உன்வித்து

முகுந்தன் சொன்ன கீதைநீ
முக்திநெறிக்கோர் பாதைநீ
அகன்று மாநிலம் பலகொண்டும்
அட! ஒன்றாம் அத்வைதம்நீ!

ஓங்கி உயர்கின்ற தர்மம் நீ
உளத்தில் நிறைந்த நண்பன் நீ
தாங்கி உயிர்தரும் அம்மா நீ
தானாய் ஓளிரும் ஆத்மா நீ

விரிந்து பறக்குமே தாயின் மனிக்கொடி!
வெல்க பாரதம் என்று ஸ்வரம்படி!
வாழ்க பாரதம்! வாழ்க சந்ததம்!
வாழ்க பாரதம்! வாழ்க சந்ததம்!