பழக்கம்

லாவண்யா சத்யநாதன்

ஒருவனுக்கு

உண்ணல் ஊதல் உறிஞ்சல் மூன்றில்

ஏதேனும் ஒரு நல்லபழக்கம் இருக்கவேண்டும்.

ஒருவனுக்கு

துதித்தல் படித்தல் அற்ப மகிழ்ச்சிகள் மூன்றில்

ஏதேனும்ஒரு கெட்ட பழக்கம் இருக்கவேண்டும்.

ஒருவனுக்கு

உணவுப்பிரியம் பயணப்பிரியம் இசைப்பிரியம் மூன்றில்

ஏதேனும் ஒரு அலாதி பிரியம் இருக்கவேண்டும்.

ஒருவனுக்கு

அத்தனோ சித்தனோ நண்பனோ மூவரில்

ஏதேனும் ஒரு ஆதர்சம் இருக்கவேண்டும்.

ஒருவனுக்கு 

இப்படியெதுவும் இல்லையேல்

பத்துக்கு ஐந்து

உரிமை வீடொன்றும்

உல்லாச வீடொன்றும் இருக்கும்

.

அதனால்  மிருதுலா

மாப்பிள்ளையின் சின்ன பழக்கங்களை

பெரிதுபடுத்தாதே என்று பாட்டி

பேத்திக்குச் சொன்னாள் புத்திமதி.

One Comment on “பழக்கம்”

Comments are closed.