ப.மதியழகன்/காந்தி பிறந்த மண்

காந்தியை மகாத்மா ஆக்கியது
அகிம்சை எனும் மந்திரமே
அகிம்சையால் சுதந்திரம் பெற்ற
ஒரேயொரு நாடு
நம் பாரதத் திருநாடு
ஆயுதம் தாங்காமலேயே
ஆங்கிலேயர்களை
கப்பலேறச் செய்தோம்
காந்தி சொல்லே
வேதவாக்கு என்று
‘வெள்ளையனே வெளியேறு’
என்ற கூக்குரலுடன்
நாடே வீதிக்கு வந்து
போராடியது
காந்தியைத் தவிர
தலைவன் என்ற
சொல்லுக்கு தகுதியானவர்
வேறு யாருமில்லை
அதனை இன்றைய
தலைமுறை உணரவேண்டும்
அடக்குமுறைக்கு எதிராக
வன்முறை
கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தால்
நாட்டின் வரலாறே
மாறியிருக்கும்
நாளைய பொழுது
நமக்கான பொகுது
எழுதட்டும் இந்தியா
புது வரலாறு!