நாகேந்திர பாரதி/எது சுதந்திரம்



மற்றவர்க்காய் எழுதினாய்
படித்தவர் பல பேர்

மற்றவர்க்காய்ப் பேசினாய்
கேட்டவர் பல பேர்

உனக்காக எழுது
படிப்பவர் படிக்கட்டும்

உனக்காகப் பேசு
கேட்பவர் கேட்கட்டும்

இதுவே உன் இயற்கை
இதுவே உன் சுதந்திரம்

————

One Comment on “நாகேந்திர பாரதி/எது சுதந்திரம்”

Comments are closed.