
தேவையான பொருட்கள்::::
1 கப் வெள்ளை பூசணிக்காய் நறுக்கியது
1 Tbsp எலுமிச்சை சாறு
1 கப் தயிர்
1 தக்காளி நறுக்கியது
2 Tbsp துவரம் பருப்பு
1 Tbsp பச்சரிசி
1 Tbsp துவரம் Tsp மஞ்சள் தூள் 1/4 கப் தேங்காய் துருவல்
2 பச்சை மிளகாய்
2 காய்ந்த மிளகாய்
1 துண்டு இஞ்சி
1 Tsp சீரகம்
உப்பு தேவையான அளவு
2 Tbsp எண்ணெய்
1/2 Tsp கடுகு
1 கொத்து கருவேப்பிலை
செய்முறை:::
முதலில் துவரம்பருப்பு மற்றும் பச்சரிசையை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
பின்பு தயிரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கடைந்து வைக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் தனியா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, ஊறவைத்த அரிசி பருப்பு இவைகளை சேர்த்து வதக்கவும்.
பின் நாம் வறுத்த பொருட்களை குளிர வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அதன் பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில நறுக்கிய பூசணிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து இவை மூழ்குமளவு தண்ணீரன ஊற்று பின் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.
பின்பு பூசனிக்காய் நன்கு வெந்ததும் நாம் அரைத்த விழுதை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
பின் மசாலா வாசனை போய் நன்கு கொதித்து வநததும் நாம் கடைந்து வைத்திருக்கமே் தயிரை ஊற்றி நுரைவரும் போது இறக்கி கொள்ளவும். பின் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். அவ்வளவுதான் சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு ரெடி….

சூப்பர்