
கூழாங்கற்களோடு
பேசிக்கொண்டு
பாறை இடுக்குகளில்
ஓடிக்கொண்டு
நாணற் தோப்ப்பில்
சுற்றிக்கொண்டு
இதமான மணலில்
கெண்டை மீனாக
நீந்திக் கொள்ளவே
விருப்பமெனக்கு…
இதைக் கேட்டுக்கொண்ட
நீங்கள்
என்னை பலநிற பலநிற
கண்கவர் மீனாக்கிவிட்டீர்கள்..
ஒருசில கூழாங்கற்களோடும்..
பூற்களோடும்..
சில பொம்மைகளோடும்..
இப்போது நானும்
குறுக்கும் நெடுக்குமாய்..
ஆக்சிஜன் நிரப்பப்பட்டு
குடுவைக்குள்
அடைக்கப்பட்ட நதியில்!
