வே.கல்யாண்குமார்/மண்பாண்டமே


கொண்டுவந்து போட்டாண்டி ஒருவன்!
குதிகாலால் மிதித்தாண்டி ஒருவன்!
மொண்டு மொண்டு நீர்ஊற்றி பிசைந்து…
மண்பாண்டம் வனைந்தாண்டி குயவன்!

மண்தரையில் விழுந்து எழுந்து ஆடி..
மண்குவித்து மனம்களித்து மகிழ்ந்து விளையாடி.. பெண்கலந்து பேசி உடனாடி.. மண் உடைந்து கலந்து புதைந்தாண்டி!

மண் பானை நெருப்பினிலே வெந்து..
மண் பொம்மை யாகி
கைத் தவழ்ந்து.
மண் விளக்காய் மன
வீட்டில் ஔிர்ந்து..
இடுகாட்டில் பானையாக உடைந்து.. போனவனே மண்பாண்டம் தான்டி.!