கோ யுன் கவிதை/தமிழில் :எம்.டி.முத்துக்குமாரசாமி

நிலவொளி இரவு

இது இன்றிரவு ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு

தன் பாதையில் செல்லும் நிலவு.
ஒடுங்கி வருத்தமாக ஒலிக்கிற.
சில புல்லாங்குழல் சப்தங்களில் மயங்கி தனக்குக் கீழேயுள்ள உலகை
உற்றுக் கவனிக்கிறது தனது இதயம் திருப்தியுறும் வரை, பிறகு, நகர்ந்து செல்கிறது

நிலவு தன் பாதையில் நிலைபெற்று விட்டது என
எந்தவொரு ஆத்மாவும் அறிவதற்கு முன்பே புல்லாங்குழல் நின்று விடுகிறது.

எங்குமே எதிரிகள் இல்லை.