
துளி 222
என் வீட்டில் கீழே பூனைகள் புழங்குகின்றன. நாய்கள் எப்பாவாவது எட்டிப் பார்க்கின்றன.
நான் விரும்பி பூனைகளை வளர்க்கவில்லை. ஒருமுறை எழுத்தாளர் ஐராவதத்திடம் ‘எதாவது குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கலாமே’ என்றேன். அவருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்பதால் அப்படி கூறினேன். அதற்கு அவர் , ‘நாயா பூனையா வளர்ப்பதற்கு,’ என்றார்.
இப்போது பூனைகளைப் பார்த்தால் அவற்றை வளர்ப்பது அப்படி சுலபமில்லை என்று தோன்றுகிறது. அவற்றை எப்படித் துரத்துவது என்றுதான் நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
பூனைகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இரவு நேரத்தில் சின்ன குழந்தைகள் போல் மாறி அழுது தொலைக்கின்றன. மிக எளிதாகப் பூனைகள் குட்டிகளை உற்பத்தி செய்கின்றன. அதாவது. எங்கள் வீட்டுத் தரைதளத்தில்வாகனம் வைத்துக்கொள்ளும் இடம் இருக்கிறது.
அந்த இடத்தை டூ பாத்ரூமாக மாற்றி விடுகின்றன. கண்ட இடத்தில் பூனைகள் பாத்ரூம் போகின்றன. அடுக்கத்தில் பணி புரியும் பெண்மணி அருவருப்பு அடைகிறார்.
பூனையின் மலத்தின்மீது மண்ணை போட்டு மூடி விடுகிறார். தினமும் வழக்கமாக நடக்கிறது. தினம் தெரு குப்பை அள்ள வரும் துப்பறவாளரை சுத்தம் செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களோ மறுத்து விடுகிறார்கள். ‘தெருவில் தென்பட்டால் கூறுங்கள்’ என்கிறார்கள்.
அதனால் நான் பூனைகளை நாய்களை வெறுக்கிறேன்
