கசங்கிக் கிடந்தது
ஒரு காதல் கடிதம்.
எழுதியவன் பெயரும் இல்லை
எழுதியது
யாருக்கென்றும் தெரியவில்லை .
அதில் காதல் மட்டும்
யாசிக்கப்பட்டிருந்தது.
அது அவளால் ஏற்கப்பட்டதா
என்பதும் தெரியவில்லை.
அவளுக்கு அந்தக் கடிதம் கிடைத்திருக்குமா ?
அவள் மறுத்துக் கசக்கியதா
அல்லது
அவளே பயந்து குப்பையில் எறிந்ததா ?
எதுவும் தெரியவில்லை
என்றாலும் காதல் இருக்கிறது
அந்தக் கசங்கிய காகிதத்தில்…
