ஸ்ரீதர் சாமா /வந்து போக வந்தவர் தாமே நாம் ?

போலந்து துறவி `ஹோபட்ஸ் கெய்ம் ‘ சிறந்த துறவி. ஒரு சமயம் அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார் . வந்தவர் ஞானியின் அறையை நோட்டமிட்டார். பொருட்கள் அதிகம் இல்லை . “என்ன இது இதனை புகழ் பெற்ற உங்களிடம் பொருட்கள் அதிகம் இல்லையே . சாப்பிட ஒரு மண் பாத்திரம் , சில புத்தகங்கள் , நீர் குடுவை, குறைந்த பட்ச ஆடை , பழைய காலனி , சில சில்லறை நாணயங்கள்… நீங்கள் வேறு ஏதாவது வீட்டிலும் வசிக்கிறீர்களா ?”
“இல்லையே. இந்தக் குடியிருப்பே எனக்கு பளுவாய் உள்ளது. நான் வேறு எங்கு போவது?”
“புழங்க பொருட்கள் ஒன்றுமே இல்லையே . எப்படி வாழ்கிறீர்கள் ?”
“அப்படிப் பார்த்தால் இதோ உங்களிடம் கூடத்தான் ஒன்றும் இல்லை. நீங்கள் வாழவில்லையா ?”
“நான் ஒரு விருந்தாளி போல் வந்திருக்கிறேன். சிறிது நேரம் தங்கிவிட்டுப் போய்விடுவேன் .”
“நானுமே உங்களைப்போல் இந்த உலகிற்கு ஒரு விருந்தாளி தானே . என் வேலை முடிந்ததும் போய்க்கொண்டே இருக்க மாட்டேனா என்ன?”

வந்தவருக்கு வாழ்க்கை புரிய ஆரம்பித்தது.