மா. தக்ஷிணாமூர்த்தி/முற்போக்கு மாதர்

உன்வருகை கண்டு
தனியறையில் ஒளிக்கும்
ஆண்மகனைத் தேடிப்பிடித்து
‘ஆண்பிள்ளையோ நீ?”
எனக் கேட்டு
அவன் இடையைத்
தடவிப் பார்க்கும்
உன்னைக் கண்டு
ஆண்மை கலங்கித்
திரிகின்றேன் யான்.