மா. தக்ஷிணாமூர்த்தி/பஞ்சாமிர்தம்

புத்தாண்டு
மத்தாப்பூ கொளுத்தி
அத்தானென இழுத்துப்

பஞ்சணையைப் சரண்புகுந்து
பஞ்சாமிர்தத்தில் விரல்விட்டாள்
மஞ்சுளா.

ஐயையோ!
அச்சமென்பதில்லையோ
இப்பெண்களுக்கு?

விரலில் தேள்கொட்ட
விறலி பிடித்தால்
விரண்டுவிடுமோ விடம்?

பஞ்சபூதங்கள் பொங்கப்
பஞ்சாமிர்தம் பொங்கிற்று
மஞ்சுளாவின் நெஞ்சில்.