
ஒரு பக்கம்
வாழ வழி வகுக்கும்
மறுபக்கம்
சாகக் குழிபறிக்கும்
உங்களைப் போலல்ல
நாங்கள்.
நாங்களோ
வாழவும் விரும்பமாட்டோம்
சாகவும் துணிய மாட்டோம்.
உங்களைப் போலல்ல
நாங்கள்.
வாழாமல் வாழ்ந்து
சாகாமற் சாகும்
நாங்கள் நாங்களே.

ஒரு பக்கம்
வாழ வழி வகுக்கும்
மறுபக்கம்
சாகக் குழிபறிக்கும்
உங்களைப் போலல்ல
நாங்கள்.
நாங்களோ
வாழவும் விரும்பமாட்டோம்
சாகவும் துணிய மாட்டோம்.
உங்களைப் போலல்ல
நாங்கள்.
வாழாமல் வாழ்ந்து
சாகாமற் சாகும்
நாங்கள் நாங்களே.