
வகுப்பறையில் கற்றுக்கொடுத்தவர்களெல்லாம்…
இன்று கல்லறையில் இருக்கிறார்கள்…
கற்றுக்கொடுத்ததெல்லாம்
என்னிடம்தான் இருக்கிறது வடுமாறாமல்.
வாழ்வின் வழிநெடுக கற்றுக்கொடுத்தவர்களை
கணக்கிட வழியில்லை….
படித்தஅறிவைவிட பட்டறிவே
வாழ்வைக் கடக்க வழிவகுக்கிறது.
தன்னறிவுவருவது மரத்தின் தூரிலா இருக்கிறது…
உனக்குள் இருக்கும் ஔியை மனந்தான்
கொண்டுவரவேண்டும்…
மரத்திலென்ன இருக்கிறது .
இறைச்சிக்கான கோழியை
உரமூட்டி வளர்ப்பதுபோல்
இன்றையக் கல்விநிலையங்கள்.
பொய்யான பதிவோடு
பலகல்லூரிகளில்
மோசடிப்பேராசியர்கள்.
ஆசிரியரைஅடிக்க கைஓங்கும்
அரசுப்பள்ளி மாணவர்கள்…
ஊதியம் லட்சம் அருகில் வந்தாலும்
அலட்சியமாய் வாழும் ஆசியர்கள்.
ஒருசடங்காய் வாழ்த்தினைச்
சொல்லிவைப்போம் என்றில்லை….
எங்காவது ஒருவரிடமாவது
மனசாட்சி இருக்கக்கூடும்…
அவருக்கான
தினம் இன்றாகிப்போகட்டும்.
♦
